உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு

தூத்துக்குடி: ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை'' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா அளித்த பேட்டி: ஜனவரி மாதம் கடலூரில் தே.மு.தி.க., மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை நடப்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை பெற்று ஆக வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=193w55ko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும், ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் திட்டம் என மூளை சலவை செய்து பெண்களின் ஓட்டுக்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ.,வினர், அ.தி.மு.க.,வினர் குறித்து விமர்சிக்க கூடாது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''கூட்டணி என்று அமைத்த பிறகு அதற்குள் சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கருத்துக்கள் சொல்வதை கட்டுப்படுத்துகின்றனர்' என பிரேமலதா பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhakumar Srinivasalu
மே 23, 2025 12:58

பேரம் சரியாக படியவில்லை போல் தெரிகிறது?. அதனால் தான் இந்த அறிக்கை


சுந்தரம் விஸ்வநாதன்
மே 23, 2025 12:38

திமுக கூட்டணியில் துண்டு போட்டுவிட்டதால் இப்படி பேசுவதைக் குறைக்கவும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 11:31

இதுபோல் நான் சொல்லாமல் இருக்கணும்னா சீட்டும் நோட்டும் வேண்டும்..... பேச்சுவார்த்தைக்கு சுதீஷ் ரெடி....!!!


xyzabc
மே 23, 2025 10:35

மேடம், இது தெரிந்த விஷயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை