உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் தி.மு.க., அரசு கடலில் கனிமவளம் எடுக்க அனுமதி தந்தது ஏன்?

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் தி.மு.க., அரசு கடலில் கனிமவளம் எடுக்க அனுமதி தந்தது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: 'மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், கடலில் கற்றாலைக்கும், கனிம வளம் எடுப்பதற்கும் கையெழுத்திட்டது ஏன்?' என, தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநிலத்தலைவர் சின்னத்தம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rord0o29&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். துவக்கத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு, மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது செயல்படுத்த மாட்டோம், எனக்கூறி வருகிறது.இதே முதல்வர், தமிழக கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை, 30,000 கோடி ரூபாயில் கடலில் காற்றாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றிற்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடலில் கனிம சுரங்கம் தோண்டும் போது, பல நுாறு கி.மீ., கடல் வளம் முழுதும் அழிந்து விடும். கடலியல் சூழல் பாதிக்கப்படும்.கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடலியல் சமன்பாடு சிதைக்கப்படும் போது, இயற்கை பேரழிவு தடுக்க முடியாமல் போகும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சுரங்க அனுமதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மீனவர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S.V.Srinivasan
ஜன 12, 2025 12:19

நல்லா கேளுங்க நல்லா கேளுங்க . 2026ல ஆட்சிக்கு வர விடாதீங்க.


Sridhar
ஜன 12, 2025 11:53

திருட்டுத்தனமா எதெல்லாம் செய்யமுடியுமோ அது அத்துணையும் நாங்க செய்வோம், மக்கள் எதிர்ப்பு வந்த எடத்துல, அடக்க முடிஞ்சா அடக்கிடுவோம், முடியலைன்னா நாங்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி செஞ்சிகிட்டு மத்திய அரசு மேல பழைய போட்டுருவோம். இதெல்லாம் எங்க பழைய டெக்கினிக்கு எதோ புது விஷயம் மாதிரி சின்ன புள்ள போல கேக்குறீங்க??


Barakat Ali
ஜன 12, 2025 08:37

எங்க குடும்பத்துக்கு எது ஆதாயமோ அதைத்தானே பண்ண முடியும் ????


அப்பாவி
ஜன 12, 2025 08:06

கடல்ல என்ன நெல்லா பயிர் பண்றாங்க?


Kasimani Baskaran
ஜன 12, 2025 08:00

கண்டமேனிக்கு மணலள்ளி ஆற்றுப்படுக்கைகளை நாசம் செய்து நீர் நிலைகளுக்கு நிரந்தரமாக கெடுதல் செய்தது மாடல் அரசு என்றால் அது மிகையாகாது. பல இடங்களில் ஆத்தா தீமகாவினரும், தாத்தா தீம்காவினரும் சேர்த்து மலைகளையே முழுங்கி விட்டார்கள். அதையெல்லாம் ஒப்பிட்டால் டங்ஸ்டன் சுரங்கள் குறைந்தபட்சம் அப்பகுதிக்கு சுபிட்சத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கனிம வளம் எடுப்பதால் பவளப்பாறைகள், அவற்றில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்றாலும் - பல இடங்களில் வெறும் மணல் மட்டுமே உள்ளது.


Svs Yaadum oore
ஜன 12, 2025 07:05

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம், அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று அவதூறு கிளப்பி விடுவது மதுரை பாராளுமன்றம்.. கன்யாகுமரியில் விடியல் திராவிடனுங்க மலையை பெயர்த்து கேரளா ஏற்றுமதி.. அதை கேட்க அவனுக்கு வக்கில்லை.. அரிட்டாபட்டி மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள். அதற்கு முகமூடி தான் டங்ஸ்டன் ஒன்றிய அரசு என்று பேசுவது.. இது மத்திய அரசு மேல் பொய்யான அவதூறு என்று அண்ணாமலை ஏற்கனவே அரிட்டாபட்டி சென்று அங்கு மக்களிடம் தெளிவுபடுத்தி விட்டார் ...


Svs Yaadum oore
ஜன 12, 2025 06:59

அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் விடியல் போலீஸ் வழக்கு பதிந்துள்ளனராம் .....அரிட்டாபட்டி மலை மற்றும் அதில் உள்ள நீர் நிலைகள் வைத்துதான் அதே ஊரே வாழுது ....இந்த மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள் ..அதற்கு முகமூடி தான் டங்ஸ்டன் ஒன்றிய அரசு என்று பேசுவது ..இதை அண்ணாமலை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார் ...பல ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்Granite எடுப்பதற்காக தமிழக அரசு அளித்த உத்தரவால் தங்கள் கிராமத்தில் இருக்கும் மலையில் இரவு நேரத்தில் ஆய்வு செய்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் போராட்டம்..அரிட்டாபட்டியின் மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது ...இதை அழிப்பதற்குத்தான் விடியல் திராவிடனுங்க முயற்சி ...


N namaste namaste
ஜன 12, 2025 05:26

மத்திய மோடிஜி தலைமையிலான அரசு மீனவர்களுக்கு நன்மைகள் சேய்தாலும் நன்றிகெட்டத்தனமாக திருட்டு திராவிட மாடலுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்ததற்கு நன்றிக்கடன் இது . உங்கள நம்பித்தான் அடுத்த ஆட்சியும் என சொல்லியிருக்கிறது மானங்கெட்ட திராவிட மாடல் கட்சி


புதிய வீடியோ