உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பேரூராட்சி தலைவர் கைது

தி.மு.க., பேரூராட்சி தலைவர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பணம் வைத்து சூதாடிய தி.மு.க., பேரூராட்சி தலைவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஒருவீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் வந்தது. நேற்று முன்தினம் மதியம் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த நாசரேத் பேரூராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த மாமல்லன்(43) மற்றும் ராஜன்(55), டெனி(38), ஸ்டீபன்(37), கோயில்ராஜ்(50), சாமுவேல்(29), கமல்காந்த்(29), பிரேம்குமார்(35) ஆகிய எட்டுபேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35,130 ரூபாய், 52 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை