உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷன் பதில்

 தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாார். விசாரித்த உச்ச நீதிமன்றம் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் கமிஷன் தாக்கல் செய்துள்ள பதில் மனு:

எஸ்.ஐ.ஆர்., பணி தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்கவும், தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்கவும் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் துாய்மையை நிலை நிறுத்த, சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடத்த எஸ்.ஐ.ஆர்., அவசியம். இதற்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது. எஸ்.ஐ.ஆர்., குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ள, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற மனுக்கள், தேர்தல் கமிஷனின் அரசியலமைப்பு கட்டமைப்பு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Rathna
டிச 03, 2025 11:35

பல தொகுதிகளில் கள்ள வோட்டு என்பது பலமான ஆயுதம். இறந்து போனவர்கள், ஊரை விட்டே போனவர்கள், தேர்தல் நாளில் ஊரில் இல்லாதவர்கள், பல தொகுதிகளில் கள்ள வோட்டு வைத்து உள்ளவர்கள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள் மற்றும் கல்யாணமண்டபத்தில் தங்கி வோட்டு போடும் ரவுடி கூட்டம் என ஒரு தொகுதியில் சில ஆயிரம் வோட்டு தேறும். இதுவே அந்த தொகுதி வெற்றியை தீர்மானிக்கிறது. அதை எதிர்த்து எலெக்க்ஷன் கமிஷன் சார் கேள்வி கேட்டால், நாங்கள் மத்திய அரசு ஒழிக என்று கூப்பாடு போடுவோம்.


Venugopal S
டிச 01, 2025 20:05

வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் பதில் மனு தான் தாக்கல் செய்துள்ளது.என்னவோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பே அளித்து விட்டது போல் துள்ளிக் குதிப்பது அவர்களுக்கு அரசியல் பொருளாதார அறிவு மட்டும் இல்லை,சட்ட அறிவும் பூஜ்யம் என்பதையே காட்டுகிறது!


M.Sam
டிச 01, 2025 15:10

அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை உக்கதோ அதுபோல கேஸ் போடா அவர்களுக்கும் உரிமை உள்ளது முண்டிந்தால் கோட்டைக்கு போ அங்க உன் நியாயத்தை ??/ ஏடுத்து வை பார்க்கலாம் அது எல்லாம் செய்ய மாடீங்க வாக்காளர்களை முட்டும் நீக்கு வீங்க அது ஏப்படி ஏற்று கொள்ள முடியும் ??


Modisha
டிச 01, 2025 16:38

நீங்க ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் கமிஷன் அதிகாரத்தைதை கேள்வி கேட்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது.


vivek
டிச 01, 2025 16:51

அப்போ மொக்கை வாங்கி கொள் சாம்


sankar
டிச 01, 2025 13:37

ஒரு சாதாரண நிகழ்வான - வாக்காளர் பட்டியல் சீறமைப்பு - அதை அரசியல் செய்யும் ....


Kumar Kumzi
டிச 01, 2025 13:28

சேசத்துரோகிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் திருட்டு திமுகாவை தடை செய்ய வேண்டும்


Ms Mahadevan Mahadevan
டிச 01, 2025 13:22

தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் எதுவும் ஞாயமா நடக்கிற மாதிரி தெரிய வில்லை. எல்லாமே நியாயமற்ற நிலையில் உள்ளன


Sridhar
டிச 01, 2025 13:11

இந்த வழக்கை அபராததுடன் தள்ளுபடி செய்வதோடு மட்டுமில்லாமல் அரசியல் சாசன அமைப்பின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைளில் குறுக்கீடு செய்ததற்க்காகவும் திருட்டு தீமுகா கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? வெறும் அபராதம் மட்டும் விதித்தால், கட்டிவிட்டு ஓடிவிடும் இந்த கட்டுமரக்கும்பல்.


SIVA
டிச 01, 2025 12:57

முதல் முறை பத்து கோடி அபராதம் மீண்டும் அடுத்த முறை செய்தால் சிறை தண்டனை மற்றும் அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் ....


Madras Madra
டிச 01, 2025 11:49

திமுக வையே தள்ளுபடி செய்ய வேண்டும்


seshadri
டிச 01, 2025 11:20

ஒரு மதம் மாறிய வந்தேறி வட இந்தியர்களை பற்றி கருத்து எழுதுவது தவறு. இவர எல்லாம் நாடு கடத்த வேண்டும்.


Kumar Kumzi
டிச 01, 2025 13:31

ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை