உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது

 பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது

மதுரை: ''மத்திய பா.ஜ., அரசு கொண்டுவரும், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,'' என, த.வெ.க., அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில் சட்டசபையில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தற்போது லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை. ஆனால், மத்திய பா.ஜ., அரசு, அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதாவை கொண்டுவருகிறது. இதனால், மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. சிறுபான்மை மக்களை ஒதுக்குவது தான் இந்த மசோதாவின் நோக்கம். தமிழகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து இதை முறியடிக்க வேண்டும். பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவான மசோதா தாக்கலாகும்போது தி.மு.க., வெளிநடப்பு செய்யப் போவதாக தகவல் வருகிறது. அப்படி செய்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல; நாட்டிற்கே தி.மு.க., செய்யும் துரோகம். குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பா.ஜ.,விடம் அடகு வைக்க பார்க்கிறார் தி.மு.க., தலைவர் ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raghu
ஆக 10, 2026 16:55

லாலே லாலல லாலா பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்


அநாமதேயன்
ஆக 10, 2026 15:53

நீயே அங்கிருந்து வந்த ஆள்தானே


ராஜா
ஆக 10, 2026 13:50

இலங்கையில் தமிழர்களை கொல்ல ஆயுதம், ராணுவ உதவி கொடுத்த காங்கிரசோடு தவெக கூட்டணி வைத்த போது மட்டும் இனித்ததா?


UTHAMAN
ஆக 10, 2026 13:18

அட ஏன்டா .....ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காண்+கிராஸுடன் கூட்டணி வெச்சுகிட்டு, எப்ப பார்த்தாலும் பாஜகவை தீண்டத்தகாத கட்சிபோல பேசிகிட்டு........மிஷிநரிகள் கும்பல்கள்.


vairam
ஆக 10, 2026 11:28

தமிழின துரோகி காங்கிரஸ்ஸுடன் கூட்டணி வைத்து அடுத்தவர்களை குறை சொல்கிற மானங்கெட்ட கட்சி


sankar
ஆக 10, 2026 11:23

அதுல உனக்கு என்ன பிரச்சினை


Arjun
ஆக 10, 2026 11:12

கான்கிரஸ் திமுக ஓட்டை வாங்கி வெற்றி பெற்றுவிட்டு உங்களுடன் பதவி ஆசையில் வரவில்லையா? புலம்பல்


Santhakumar Srinivasalu
ஆக 10, 2026 10:56

அரசியலில் இதெல்லாம் சகஜம்! அடுத்த கட்சிக்கார எம எல் ஏ களை பதவியை ராஜினாமா செய்ய வைத்து மட்டும் சரியா?


sivakumar Thappali Krishnamoorthy
ஆக 10, 2026 09:45

தமிழக மக்கள் பிஜேபி+ தி மு க கூட்டணிக்கு வோட்டு போடுவாங்களா? மக்கள் மறை கலண்டவர்களா என்ன ?


ராஜா
ஆக 10, 2026 13:53

இல்லை... இல்லை...மிக மிக தெளிவானவர்கள் தான். ஹிந்தி திணிப்பு செய்து தமிழர்களை வஞ்சித்த காங்கிரசுக்கு தான் போடுவார்கள். மறை என்று ஒன்று இருந்தால் தானே அது கழன்று போவதற்கு?