உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில சாதனையை பாராட்டாத மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி.,; தி.மு.க.,வினர் எதிர்ப்பு

மாநில சாதனையை பாராட்டாத மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி.,; தி.மு.க.,வினர் எதிர்ப்பு

மதுரை : ''மதுரை மாநகராட்சி குப்பை நகராக உள்ளதால் அதன் துாய்மையைப் பேணிக்காக்க முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்'' என மதுரையின் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் விமர்சனம் செய்ததற்கு, 'கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாம்' என தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் 2024 -2025க்கான துாய்மை நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் '10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை 40வது இடம் பெற்றுள்ளது. மதுரையில் வீடுதோறும் குப்பை சேகரித்தல் 37 சதவீதம், தரம் பிரித்தல் 26 சதவீதம், பொது கழிப்பிடங்கள் துாய்மையின்றி இருப்பதால் 3 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளதாக வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகள் பட்டியலிலும் 543வது இடம் பெற்று, மதுரையின் துாய்மை மோசமாக உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் தலையிட வேண்டும்' என வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: தேசிய அளவில், 3 லட்சத்திற்கும் கீழ், 3 முதல் 10 லட்சம் வரை, 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என 3 பிரிவுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேல் உள்ள மாநகராட்சிகளில் மதுரை 40, சென்னை 38, கோவை 28வது இடங்களை பெற்றுள்ளன.வீடுதோறும் குப்பை சேகரிப்பு பிரிவில் மதுரை 90 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆய்வில் புள்ளிவிபரங்கள் தவறாக உள்ளது. இதுகுறித்து மாநில அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மூலம் மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரையில் துாய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக துாய்மை பணி சவாலாக உள்ளது. போராட்டத்தை நடத்துவதில் வெங்கடேசன் சார்ந்த கட்சியின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.ஆய்வில் 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஈரோடு, சேலம் மாநகராட்சிகளுக்கும் கடைசி இடங்கள் தான் கிடைத்துள்ளன. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அகமதாபாத் முதலிடம் பெற்றுள்ளது. சென்னைக்குக்கூட 38 வது இடம் தான் கிடைத்துள்ளது. மதுரையை விமர்சித்த வெங்கடேசன், சென்னையையும் விமர்சித்திருக்கலாமே.

பதிலடி தருவோம்

வட மாநில நகரங்கள் துாய்மையானவை என்பது போல் ஆய்வு முடிவுகள் உள்ளன. தமிழக நகரங்களுக்கு கடைசி இடங்கள்தான் கிடைத்துள்ளன. ஆனால் இதுகுறித்த பார்வை வெங்கடேசனுக்கு இல்லை. இவரது கட்சியை சேர்ந்தவர் தானே துணைமேயராக உள்ளார். மதுரையில் ஏன் துாய்மை இல்லை என அவரையே கேட்கலாமே. இதே ஆய்வில் மாநில அளவில் மதுரை 3வது இடம் பிடித்துள்ளதே. இது தமிழக அரசுக்கு பெருமை தானே. அதை ஏன் பாராட்ட அவருக்கு மனம் இல்லை.தி.மு.க., கூட்டணி குதிரையில் சவாரி செய்து ௨வது முறை எம்.பி., பதவி சுகம் அனுபவிக்கும் வெங்கடேசன், தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இனியும் விமர்சித்தால் தக்க பதிலடி தருவோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Haribabu Poornachari
ஜூலை 21, 2025 10:18

எம் பி பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பை ஸ்டாலினுக்கு காட்டலாமே


selvelraj
ஜூலை 21, 2025 09:43

இவரது இவ்வளவு நாள் மெளனத்திற்கான விலை அவ்வளவுதான். இனிமேல் தேர்தல் வரை அல்லது காசு கிடைக்கும் வரை கூவுவார். முதல்வர் மதுரை வந்த போது துணி வைத்து சாக்கடையை மறைத்தார்களே. இப்போது சுத்தமான நகர பட்டியலில் கடைசி இடம் பிடித்திருப்பது ஒனறும் ஆச்சர்யம் இல்லையே. கண்ணுக்கும் வாய்க்கும் துணி போட்டு மறைத்துவிட்டது போக வேண்டியதுதானே.


veeramani
ஜூலை 21, 2025 09:10

முதலில் வாக்கு வங்கிக்காக இந்திய சீனாவின் கை குளியாக செயல்படும் மார்கிஸ்ட் கட்சியினரை வெளியேற்றுங்கள். தனியாக நின்று NOTA வாக்குகள் வாங்க இயலாத கட்சியை தனிமைப்படுத்துங்கள். வடக்கில் மெருகு வங்காளம் திரிபுர மாநிலங்களில் ஓராம் கட்ட்டிவிட்டனர். தென்இந்தியாவில்தான் கேரளாவிலும் தமிழகத்திலும் அவர்களது எச்சங்கள் இருக்கின்றன. இந்தியாவில் தொழில் புரதச்சி சரியாக எடுத்து சேல்லாதார்கு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் காரணம் இவர்களது ஒரு வாக்கிற்காக பணியாதீர்கள் . மதுரை தொன்மையிகு தமிழ்த்தாயின் நகரம். இனியும் மார்கிஸ்ட்டிற்காக தராய் யில் விழுந்து பணிந்துசெல்லவேண்டாம்


Mario
ஜூலை 21, 2025 09:06

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வேளாண்மைத் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Dv Nanru
ஜூலை 21, 2025 09:04

யோவ் தோழர் வெங்கடேசன் ஆறு வருசமா எங்கே போயிருந்தாய் தொகுதிக்கே போறது இல்லையா என்ன திடீர்ன்னு ஞானஉதயம் தேர்தல் நெருங்க உங்க இடதுசாரி புத்தியை காண்பித்துவிடீர் மெரட்டறீங்களா திமுக பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் பயப்புடமாட்டாங்க மதுரை மாநகராட்சி குப்பை நகராக உள்ளதால் அதன் துாய்மையைப் பேணிக்காக்க முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என மதுரையின் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் விமர்சனம் செய்ததற்கு, கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாம் என தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.


GMM
ஜூலை 21, 2025 08:20

நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். சுவரொட்டிகள், கொடி கம்பம் கட்சியினர் வீட்டு பகுதியில் வைக்க வேண்டும். தேவையற்ற சிலைகள் அகற்ற வேண்டும். பஸ் நிலையம் போக்கு வரத்து கழகம் பராமரிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளி, சிறு கிளினிக்... போன்றவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி கழிவு நீர், குடிநீர், சுடு காடு... போன்ற வசதிகள் செய்ய வேண்டும். சுத்த கிரயம் இருந்தால் மட்டும் உரிமையாளர் பெயரில் வரி விதிக்க வேண்டும். மற்றவை ஆணையர் மற்றும் குடியேறிகள் பெயரில் இருக்க வேண்டும். வெங்கடேசன் கவுன்சில் பதவிக்கு தகுதியற்ற நபர்.


Svs Yaadum oore
ஜூலை 21, 2025 06:57

மதுரை மாநகராட்சி 200 கோடிகள் ஊழல்....மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேடு ...மாநகராட்சி வரி முறைகேடுட்டில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லையே ஏன்? என்று மதுரை பாராளுமன்றம் கேள்வி ....மாநகராட்சி ஆணையரின் கணினி பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம் . இந்த கொள்ளையில் ஒரு சிலர் மட்டுமில்லை , இதற்கென்றே அலுவலகம் அமைத்து வரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறதாம் .....மகா கேவலமான விடியல் ஆட்சி ...


Svs Yaadum oore
ஜூலை 21, 2025 06:51

கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து என்று விடியல் கொந்தளிக்கின்றனராம் ..கொள்ளை அடித்ததில் பங்கு போய் சேராமல் இருக்கும் ...அதனால் நெருக்கடி கொடுக்கிறார் ...இவ்வளவு கேவலமாக பேசினாலும் கம்மிகளுக்கு கொஞ்சம் கூட ரோஷம் வராது ....தமிழக மார்க்சிஸ்ட் பொது செயலாளராக சண்முகம் நியமனம் பிறகு விடியல் கூட்டணி கலகலத்து போனது ....


Jack
ஜூலை 21, 2025 06:22

தியாகராஜனும் சந்தோஷமா இல்லை ..வெங்கடேசனும் இல்லை …


சாமானியன்
ஜூலை 21, 2025 06:12

சு.வெங்கடேசன் இந்த விஷயத்தில் நிசர்சனத்தை பேசுகிறார். திமுகவோடு கூட்டணி என்பதற்காக உண்மையை திரித்து கூற முடியுமா ? மதுரை மக்கள் குப்பை அகற்றுவதில் சிறுசிறுமாற்றங்கள் செய்யனும். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கக் குறைபாடு ஏற்படுகின்றது. கலெக்டர்கள், தாசில்தார்கள் என்னதான் செய்கின்றனர் ? குப்பையில் அரசியல் செய்தால் சுகாதாரக் கேடு வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை