உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்

ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்

நகராட்சி துறை பணி நியமனத்தில், தலா 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை கோடி லஞ்சம் பெறப்பட்டது என தெரியவில்லை. தமிழகமே குட்டிச்சுவராக உள்ளது. ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுக்க தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஓட்டுக்கு 50,௦௦௦ ரூபாய் கொடுத்தால் கூட தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். கூட்டணி தர்மம் என்ற பெயரில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மறுக்கின்றன. தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அதில், தி.மு.க., முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் தான், 38 கலெக்டர்களிடமும் அ.தி.மு.க., சார்பில் புகார் அளித்துள்ளோம். இந்த பணியை எதிர்த்து தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், படிவங்களை பெற தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வாயிலாக, ஸ்டாலின் பேச்சை தி.மு.க., தொண்டர்கள் கேட்பதில்லை என தெரிகிறது. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Krish Tamilnadu
நவ 07, 2025 17:40

ஓட்டுக்கு பணம் என பேசுவதையே தேர்தல் ஆணையம் மற்றும் நேர்மையான அரசியல் கட்சிகள் தடை விதிக்க கோர வேண்டும். முதலில் எண்ணம் மாறினால் தான், சமுதாயம் சீர்படும். ஜாதி ஒழிப்பு என பேசி கொண்டு, கல்வி சேர்க்கை விண்ணப்பத்தில் என்ன ஜாதி என கேட்பது போல் உள்ளது. 20 கோடிக்கு வேட்பாளர்களை விலை பேசி வாங்கி விடுவார்கள் என ஒருவர் கூறுகிறார். அரசியல் என்பது தொழிலா?. மக்கள் சேவையா?. மக்கள் சேவைக்கு அனுபவமும், மனித பண்பும், சங்கடம் இல்லாத தீர்வுகள் யோசிக்கும் அறிவும் தேவையா? இல்லை எதிரணியையும், மக்களை விலைக்கு வாங்கினால் போதுமா?.வியாபாரிகளை மக்கள் விரட்ட வேண்டும். அப்போது தான் வரிப்பணத்தில் மக்களை, சமுதாயத்தை அரசு வழிநடத்தும் முறை மாறும்.


T.sthivinayagam
நவ 07, 2025 16:54

முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஐயா அவர்களே உங்களுக்கு வாக்கு அளித்தால் காலையில் வீட்டு வாசலில் வாஷிங்மெசின் இருக்கும் என்று சொன்னிங்க வாஷிங் மெசின் எங்கே என்று மக்கள் கேட்கிறார்கள்.


Santhakumar Srinivasalu
நவ 07, 2025 13:02

சரி எவ்வளவு வாக்காளர்களுக்கு உங்க ரேட்? ஏன்னா உங்க இபிஎஸ் ஆட்சியை புடிக்கனுமில்ல?


Ayyasamy
நவ 07, 2025 12:29

Good job DMK I appreciate it.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை