உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் விற்கும் தி.மு.க.,வினர்

கள்ளச்சாராயம் விற்கும் தி.மு.க.,வினர்

சென்னை : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., வார்டு கவுன்சிலரும், அக்கட்சி இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார், கள்ளச்சாராயம் விற்றதாக, சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, மது வகைகளை வினியோகிக்கும் உரிமம் பெற்ற, மதுபான ஆலைகளை, தி.மு.க., அமைச்சர்கள் நடத்துகின்றனர். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், கள்ளச்சாராயத்தை விற்று, பலரின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். கள்ளச்சாராயத்தின் கொடிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க.,வினரால் தமிழகம், 15 ஆண்டுகள் பின்னுக்கு சென்று உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

raja
செப் 17, 2025 06:26

அதுமட்டுமா விக்கிரானுவோ கேடுகெட்ட திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளையன் விடியலின் உடன் பிறப்புகள் கஞ்சா கடத்தி விகிரானுவோ, மெத் சுடோபெற்றின் போன்ற போதை பொருளை கடத்தி விக்கிரானுவோ கேவலமான பிறவிகள்...


Vasan
செப் 17, 2025 04:52

திரு அண்ணாமலை அவர்களே, முதலில் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் ஆட்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட 3.99 கோடி ருபாய் பண வழக்கு என்ன ஆயிற்று என்று கூறுங்கள். பின்னர் நீங்கள் திமுக பற்றி பேசலாம்.


N Sasikumar Yadhav
செப் 17, 2025 17:57

கேட்ட கேள்விக்கு பதில் கூறுவதை விட்டுட்டு திராவிட களவானிங்க மாதிரி திமுக நிர்வாகி விற்ற கள்ளச்சாராயத்தை மடைமாற்றி விடுகிறீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை