உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் தி.மு.க.,வினர் மிரட்டல்

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராய புரம் சாயப்பட்டறை வீதியில், 400 வாக்காளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, அரசு சார்பில், திருப்பூர் வடக்கு தொகுதியில் வீடு ஒதுக்கப்பட்டு, அங்கு குடிபோய் விட்டனர். அவர்களுக்கான எஸ்.ஐ.ஆர்., படிவங்கள், தி.மு.க.,வினரிடம் தரப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதியில், 400 பேரும் குடியிருக்கும் வீட்டு எண் விபரங்களை கலெக்டரிடம் கொடுத்திருக்கிறோம். இதுபோல, காங்கேயம் தொகுதியில், இறந்து போன வாக்காளர்கள் பெயரை நீக்காமல், கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டிருக்கிறது. கள்ள ஓட்டு போட, தி.மு.க., துாண்டுதலின் படி, பி.எல்.ஓ.,க்கள் இவற்றை வழங்கி உள்ளனர். தேர்தல் பணியில் இருப்போர், தமிழக அரசு ஊழியர்கள் என்பதால் பணியிட மாறுதல் செய்வதாக கூறி, அவர்களை தி.மு.க.,வினர் மிரட்டுகின்றனர். தீவிர திருத்தத்தில் தவறுகள் நடைபெற்றால், வழக்கு தொடருவோம். கள்ள ஓட்டுகள் போட, தி.மு.க., செய்யும் மாயாஜால வேலைகள் எடுபடாது. - ஜெயராமன்: தேர்தல் பிரிவு செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ