உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் மன்னிப்பு; திமுக மாஜி பொன்முடி விடுவிப்பு

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் மன்னிப்பு; திமுக மாஜி பொன்முடி விடுவிப்பு

2025ம் ஆண்டு ஏப்ரலில் சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், திமுக மாஜி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, சைவம், வைணவம், பெண்கள் குறித்து அவர் பேசியது சர்ச்சையாக மாறியது.அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகராட்சியின் 134வது வார்டு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் குற்றவியல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மத உணர்வுகளை புண்படுத்துகிறார், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொன்முடியின் பேச்சு இருந்ததாக வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர் விசாரணைகளின் போது ஆஜர் ஆகாததால் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர், ஆக.7ம் தேதி சரண்டானதால், பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது பேச்சுக்கு பொன்முடி பொது வெளியில் மன்னிப்பு கோரி உள்ளார். எனவே அவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக உமா ஆனந்தன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், பொன்முடி விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

T.Senthilsigamani
நவ 04, 2026 21:01

எனவே அவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாக உமா ஆனந்தன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், பொன்முடி விடுவிக்கப்பட்டார். சபாஷ் சபாஷ் உமா ஆனந்தனுக்கு சுக்கிர தசை ஆரம்பித்து விட்டது .விழுப்புரம் மாவட்டம் இனி உமா ஆனந்தன் சொத்து தான் . சிறுமிகள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி வயது 84 .அவருக்கு சுகர், ,பிரஷர் ,மூட்டுவலி ,ஞாபக மறதி ,என வயது மூப்பின் காரணமாக மிகவும் கஷ்டப்படுவதால் அவருக்கு மன்னிப்பு வழங்க முடியுமா ? நீதி தேவதைக்கு தான் வெளிச்சம்


வேணு
நவ 04, 2026 20:49

வயது என்பது எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் மன்னிக்க வயதையும் மூப்பையும் காரணம் காட்டும் நாம், பேசுவதற்கு, அதிலும் பெண்களை அசிங்கமாக பேசியதற்கு வயது நிர்ணயம் உண்டா மனதில் வ க்கிரம் இருந்தா ல் வயது நூறு ஆனாலும் திருந்த மாட்டார்கள்


Keshavan.J
நவ 04, 2026 19:52

ஹிந்து பெண்களை தவறாக பேசினால் விடுதலை. இதுவே மற்ற மதத்து பெண்களை பேசினால் இந்த உலகத்தில் இருந்ததே விடுதலை.


Keshavan.J
நவ 04, 2026 19:32

கணம் கோர்ட்டார் அவர்களே. பேசாமல் இந்த பிங்கா மூடிக்கு மகாத்மா பட்டம் கொடுத்து அவரின் ஊழல் வழக்கிலும் விடுவித்து உத்தரவிடுங்கள். அவருக்கு வயது முப்பு குடி கொண்டுதான் போகும் குறையாது. அவருடைய பாணியைப் பின்பற்றி, இளம் திமுக அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்து, தங்கள் பிற்காலம் வரை நீதிமன்றத்தில் வழக்கை நீடிப்பார்கள் பின்னர் அவர்கள் வயதானவர்கள் என்பதால் அவர்களை மன்னித்து விட்டு விடுங்கள். .


EagleEye
நவ 04, 2026 19:27

நம் நாட்டில் எந்த அரசியல் வியாதிகளுக்கும் தண்டனை கிடைக்காது.. பொது மக்கள் மட்டுமே இளித்தவாயர்கள்...


Sudha
நவ 04, 2026 19:24

இனி வயது மூப்பு காரணமாக பேசக்கூடாது என்று தீர்ப்பு சொல்லி இருக்கலாம். எந்த அளவிற்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளதென்று மருத்துவ சோதனை செய்ய உத்தரவிடலாம்.


Karthik
நவ 04, 2026 18:57

வழக்கு பதியும் பொழுது வயது தெரியாதா? இதனால் தான் பிஜேபி கு தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட கிடைக்காமல் இருக்கிறது மெல்ல மெல்ல பிஜேபி மீது வெறுப்பு அதிகம் ஆகிறது


Keshavan.J
நவ 04, 2026 19:56

பிஜேபிக்கு கோர்ட்டுக்கும் என்ன சம்பந்தம். அப்படியானால், நீதிபதிகள் அனைவரும் பாஜக தலைவர்களுடன் கலந்து பேசிவிட்டுத்தான் தீர்ப்புகளை வழங்குகிறார்கள் என்று சொல்கிறீர்களா? உங்கள் மூளையைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இந்த வழக்கை போட்டது பிஜேபி கவுன்சிலர்


Velayutham rajeswaran
நவ 04, 2026 18:02

பாஜக திமுகவுடன் மறைமுக சமரசம் ஆகி விட்டதா