உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,

ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எட்டு எம்.பி.,க்கள் குழு, கரூர் வந்து விசாரித்து திரும்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் கரூர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர், விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

தீவிர முயற்சி

இதனால், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறக்கூடும் என பேச்சு எழுந்துள்ளது. 'தி.மு.க., -- த.வெ.க., இடையேதான் போட்டி' என, இதுவரை விஜய் பிரசாரம் செய்து வந்தார். ஆனால், கரூர் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியால், அவர் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவரை அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வர, அமித் ஷா தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல, ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் உடனே வராத; நிதியை முறையாக தமிழகத்துக்கு தராத மத்திய நிதியமைச்சர், கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் பால விபத்து, கும்பமேளா நெரிசல் உயிரிழப்பின் போது விசாரணைக்குழு அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது. கரூர் துயரச் சம்பவத்தில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பா.ஜ., பார்க்கிறது' என, கடுமையாக விமர்சித்துள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., அணியில் விஜய் சேர்ந்தால், தங்கள் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என, தி.மு.க., நினைக்கிறது.

நெருக்கடி

அதனால், கரூர் துயரச் சம்பவத்தை பயன்படுத்தி, த.வெ.க.,வுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கவும், விஜய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்கவும், தி.மு.க., திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தில், த.வெ.க.,வின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் பெயரை சேர்க்க, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காகவே, வி.சி., தலைவர் திருமாவளவன், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம்' என, கேள்வி எழுப்பியுள்ளார். எழுத்தாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், சினிமா துறையினர் என பல பிரபலங்கள், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயங்கக்கூடாது' என, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே, விஜய் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகவும், அதன் வாயிலாக, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் அவர் இணைவதை தடுக்க, தி.மு.க., காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் எந்த நேரமும் கைதாகலாம் என போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! 'த.வெ.க., தலைவர் விஜயை சட்டத்தின் முன் நிறுத்த, தமிழக அரசு தயங்கக் கூடாது' என கோரிக்கை விடுத்து, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.,க்கள் ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்டோர் வெளியிட்ட கூட்டறிக்கை: கரூர் பிரசார கூட்டத்துக்கு தாமதமாக வந்த விஜய், கூட்டத்திற்குள் வந்த பின்னும் முகம் காட்டாமல், மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும் தான், 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை வீடியோ சான்றுகள் காட்டுகின்றன. மரண சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின், வீடியோ வெளியிட்ட விஜய், எவ்வித குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ, தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாமல் பேசியுள்ளார். அரசின் மீது பழிசுமத்தி தப்பித்து விடும் உள்நோக்கம் தெரிகிறது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த, தமிழக அரசு தயங்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Mr Krish Tamilnadu
அக் 04, 2025 14:59

விஜய் அவர்கள் தானே விரும்பி சென்னை உயர் காவல்துறை அலுவலகத்தில் காவல்துறைக்காக அல்ல, நீதித்துறை சந்தேகங்களை போக்குவதற்காக தன்னை ஒப்படைப்பதாக கூறி தானே தன்னை ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன் பத்திரிகைகளையோ, மக்களையோ சந்தித்து நாங்கள் மனச்சாட்சி படி எந்த தவறும் செய்யவில்லை. சதியோ, விபத்தோ எதுவாக இருந்தாலும் சரி. அந்த நேரத்தில் த.வெ.க தொண்டர்கள் உதவியில் இருந்தார்கள். அவர்கள் காவல்துறையினால் கடைசியில் விரட்டப்பட்டனர். நாங்கள் ஓடி ஒளிய வில்லை. தாங்கள் பாதுகாப்பு, கட்சியின் நிலை அறிய, என்ன செய்ய வேண்டும் என தெரியாமல், நிர்வாகிகள் குழம்பி இருந்தனர் தவிர, நேர்மையானவர்கள் நாங்கள். மூன்று விதமான கூட்டங்களை சந்தித்தோம். தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள். அரசின் மெத்தனத்தையும் நீதித்துறை கருத்தில் கொள்ள வேண்டும். அனுபவ பட்டவர்களின் அணுகுமுறை தவறுகள் 1.ஒதுக்கப்பட்ட இடம், 2. எங்களின் 12 எச்சரிக்கை வேண்டுகோளையும் கூட்டம் மதிக்கவில்லை. 3. கூட்டத்தை கட்டுப்படுத்த, பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம், காவல்துறை ஒழுங்குப்படுத்தும் அறிவிப்புகளை செய்யவில்லை. 4. தலைவரான என்னிடம் இந்த கூட்ட சிக்கலை பற்றி காவல்துறை சார்பில் யாரும் நேரடியாக தொடர்பு கொண்டு கூறவில்லை. தொலைபேசி ஆதாரம் காட்டவும்?. என்னிடம் தெரிவிக்க அவசியமில்லை என்னும் போது, தவறுக்கு மட்டும் நான் எவ்வாறு பொறுப்பாக முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் மன நெருடலுக்காக மட்டுமே, த.வெ.க சார்பில் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதார நிதி அளிக்க உறுதி அளித்துள்ளோம். இளைஞர் சக்திக்கு எதிராக பின்னப்படும் மிக பெரிய சதி வலை.‌தற்போதும் என்னை நேசிக்கும் அந்த மூன்று விதமான குழுக்கள் பேரலை, காட்டுத்தீ போன்றவர்கள். என் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளால், அவரின் சொந்த வாழ்க்கையை தொலைத்தும், எந்த காரணங்களுக்கவும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் என் விருப்பப்படி இந்த நடவடிக்கை. என்னை பார்க்க வந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் அல்லது அவர்கள் குடும்பத்துடன் நான் சேர்ந்து புகைப்படம் எடுத்து பரிசளிக்க விரும்புகிறேன். அதற்கான ஏற்பாட்டை மட்டும் காவல்துறை செய்து தர வேண்டும். அவர்களை சந்திக்க இன்னமும் காலம் தாழ்ந்த விரும்பவில்லை. இப்படி ஒரு டூவிட் விஜய் தந்தால் எப்படி இருக்கும்?.


நிவேதா
அக் 04, 2025 12:39

இதுபோன்று தற்குறிகளை கூட்டணியில் சேர்த்தால், நாளைக்கு. எல்லோரும் சேர்த்து அணில் ஆட்டம் ஆட வேண்டிய நிலை வரும்


நிவேதா
அக் 04, 2025 12:35

. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், விஜயை குண்டாஸ்லயே அன்றிரவே கைது செய்திருப்பார்


SIVA
அக் 04, 2025 16:44

ஜெயலலிதா இருந்து இருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து இருப்பார் , இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்த கரூர் சம்பவம் தீயமூகவிற்கு தேர்தலில் எதிரொலிக்கும், நடிகர் விஜய் அவர்களை வம்பு இழுக்காமல் இருப்பது தீயமூகவிற்கு நல்லது. இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு விஜய் ரசிகர்கள் தீயமூகவிற்கு எதிராகத்தான் நிற்பார்கள். நடிகர் விஜய் பிஜேபியை அவரது கொள்கை எதிரி என்று அவர் நிமிடத்திற்கு நிமிடம் கூறினாலும், பிஜேபி விஜய் ரசிகர்களை கோபப்படுத்துவது போன்று எதுவும் பேசுவது இல்லை .......


நிவேதா
அக் 04, 2025 12:33

ஆங்கிலத்தில் கருத்து எழுதினால் தெரியாது என்று நினைக்காதீர்கள். விஜய் சென்னையில் இருந்து கிளம்பியதே லேட் புதிதாக டிராபிக் நெரிசல் காரணம் என்று கயிறு திரிக்காதீர்கள்


M Ramachandran
அக் 04, 2025 12:22

மக்கள் பணம் அவர்களுக்கு தான் உஙக வீட்டிற்கு மடைய திருப்ப அல்ல. திருடனுக்கு தேள் கொட்டியது போல் உணர்கிறீர்களா? அரசு பணம் மக்கள்பணிக்காக. உஙக குடும்ப சொத்தாக மாற்ற அல்ல. எவ்வளவு அப்பா? திராவிடம் என்று கூறுவது முக மூடி கொள்ளையர்களா? பாஜாகாவில் அண்ணாமலிய்ய வந்ததும் தான் எல்லாம் வெளியில் வருகிறது.


M Ramachandran
அக் 04, 2025 12:13

மூக்கால் அழாமல் இப்போதாவது நிலமை யாரால் ஏஆர் பட்டதோ சீர் தூக்கி பார்த்து பார பட்சம் பார்க்காமல் அவரைய காப்பாற்ற முயலாமல் பலி கொடுத்து மானத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீஙக என குட்டிக்கரணம் அடித்தாலும் விளைவுகள் மோச மாகும். சும்மா மரு படியும் மறுபடியும் குளறு படி செய்தால் விதி வலியது. துட்டு வேலைக்காகாது சார்.


M Ramachandran
அக் 04, 2025 12:06

மடியிலக்கணமில்லை யென்றால் வழியில் பயம் எதற்கு?


Sundar R
அக் 04, 2025 10:48

திமுக, தவெகவை கரூரில் ஒரே நாளில், ஒரே சமயத்தில், ஒரே தேள் கொட்டிவிட்டது என்பதை அனைத்து தமிழக மக்களும் பார்த்து விட்டு ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


கடல் நண்டு
அக் 04, 2025 09:03

இந்த வழக்கில் தீம்காவுக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.. படக்கதை மாதிரி நினைத்து 10 ரூவா மற்றும் ரசிகர் மன்ற அமைச்சரும் நடித்து பார்த்தார்கள் .. ஆனால் முடிவு வேறு பாதையில் செல்லும் .. விதி வலியது ..


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
அக் 04, 2025 08:42

இதிலிருந்தே தெரிகிறதே ஏன் 41 மக்கள் இறப்பிற்கு காரணமான விசய் கைது செய்யகூடாதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை