உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 27 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க., அறிவித்து உள்ளது.நேற்று முன்தினம் (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை கண்டித்து முதல்வர் ஸ்டாலின், டில்லியில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mhtknpav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மம் காட்டும் பட்ஜெட். இதனை கண்டித்து, வரும் 27 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடக்கும். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

SARAVANAN A
ஜூலை 26, 2024 05:52

தமிழகத்தி்ல் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள், மின்வாரிய கட்டண உயர்வு இதுபோன்ற எண்ணற்ற மக்கள் பிரச்சனைகளுக்காக விரைவில் ஒரு போராட்ட அறிவிப்பை முதல்வர் வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடையலாம்


ராமகிருஷ்ணன்
ஜூலை 26, 2024 05:24

கடைசியாக ஆக ஆக எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லிடாதீங்க. ஏனெனில் ஆட்சியில் இருப்பது திமுக.


xyzabc
ஜூலை 26, 2024 04:47

வேற என்ன வேலய் . போராட்டம் என்பது dravida model.


ஆசாமி
ஜூலை 25, 2024 20:44

லூசா இவர்?


Barakat Ali
ஜூலை 25, 2024 18:27

நகைச்சுவை விருந்து படைப்பவர் ..........


J.V. Iyer
ஜூலை 25, 2024 17:24

போராட்டம் என்றாலே திமுகவுக்கு குஷிதான். அதுவும் மாடல் அரசின் ஆதரவோடு சைக்கிள் செயின், சோடாபாட்டில் எல்லாம் உண்டா? கடை உடைப்பு, பேருந்துக்கு தீ வைத்தல், உணவகம் முற்றுகை, எல்லாம். பழசு மறக்குமா? மறக்க முடியுமா? திமுகவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். நல்லா அனுபவியுங்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 25, 2024 17:07

இன்று முதல் டாஸ்மாக்னாடு மத்திய பிரதேசம் போல அறிவிலி பிரதேசம் என அறிவிப்பதாக திருட்டு திராவிட மடியல் ஏசு திட்டுவது ஆட்சி நடப்பதால் ஒரு கேள்வியும் கேட்கமுடியாது. 1 மத்திய அரசு பட்ஜெட் என்றால் இந்திய முழுக்க, ஆகவே அதை யோசித்து யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று இருக்கும் 2 மத்திய அரசு பட்ஜெட்டின் மொத்த வருமானம் ரூ.46.80 லட்சம் கோடி. அதில் செலவு ரூ.48.20 லட்சம் கோடி ஆகும். மொத்தம் ரூ.1.40 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை உள்ளது .கடனுக்கு வட்டிக்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள தொகையில்தான் அனைத்து துறைகளுக்கும், மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது.எந்த பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு மாநிலத்தில் புதிதாக தொடங்கும் சில திட்டங்களை அறிவிப்பார்கள்.2024-25 தமிழகத்திற்கு பகிர்வு 4.07 சதவீதம் அதன் மூலம் கிடைக்கும் தொகை ரூ.50 ஆயிரத்து 873 கோடி ஆகும். அதேபோல் மத்திய அரசு துறை ரீதியாக அறிவித்த பல திட்டங்களில் தமிழகம்தான் அதிகளவில் பயன் பெற போகிறது. a விவசாய துறையின் கீழ் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பலன் அதிகளவில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும். b இந்தியாவில் சிறு, குறு, தொழில்களில் தமிழகம் முன்னணி. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. எனவே இவற்றின் பலன்களை தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்குதான் கிடைக்க போகிறது. c அதேபோல் செல்போன் போன்ற மின்னணு பொருட்கள், ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகள் மூலம் தமிழகத்தில் இந்த பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெருமளவில் பயன் அடையும். d அதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும். e அதேபோல் உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில கல்வி கடன் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் பெறுவதிலும் தமிழகம் முன்னணியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். f அது தவிர குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், வீடுகள் கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கிசான் பயிர் காப்பீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகமக்களுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும். எனவே இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கபடவில்லையே தவிர, தமிழகத்திற்கான பலன் அதிகளவில் இருக்கத்தான் போகிறது.


Suppan
ஜூலை 25, 2024 16:31

ஆந்திரா, பீஹாருக்கு கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. அதே மாதிரிதான் மற்ற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா பிரிக்கப்பட்டதிலிருந்தே புதிய தலைநகரில் தேவையான கட்டமைப்பு வேண்டுமல்லவா? பிஹார் பின்தங்கிய மாநிலம் அங்குள்ளவர்கள் வேலை தேடி தமிழகத்துக்கு வந்து எங்கள் வேலை ஆய்ப்பை பிடுங்கிக்கொண்டு விட்டார்கள் என்று கூவும் உபிக்களுக்கு ஒரு கேள்வி. பீஹாரிலிருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட்ட பொழுது முக்கியமான தொழில்துறை ஜார்கண்டுக்கு சென்றுவிட்டது.ஆகவே பிஹார் மிகவும் பின்தங்கிவிட்டது. பின்தங்கிய மாநிலமான பிஹாருக்கு நிதி கொடுக்கக்கூடாது என்றால் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை நிறுத்திவிடலாமா? இதைப்புரிந்து கொள்ளுமளவுக்கு அறிவு இருக்குமா?


saravan
ஜூலை 25, 2024 16:30

இவர்கள் பாராளுமன்றம் சென்று தமிழகத்திற்காக என்ன பேசினார்கள் ... வாழ்க அவர் புகழ் வழக இவர் புகழ் என்று கோசம்போட்டுவிட்டு தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது நாமதான் இந்தியாவின் முன்னோடி மாநிலமாச்சே பின்னர் ஏன் கவலை சாதித்து காட்டுங்கள்...


Godyes
ஜூலை 25, 2024 16:24

ராமசாமி திராவிடர் என்ற பெயரை கட்சியாக மாற்றினார்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ