உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தி.மு.க., உதவி

பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தி.மு.க., உதவி

சென்னை: விபத்தில் இறந்த பெண் குடும்பத்துக்கு, தி.மு.க., சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஜூன் 1ம் தேதி மதுரையில் நடந்தது. இக்கூட்டத்தில், 'எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் இறக்கும் கட்சி உறுப்பினர்களின் வாரிசுகள், 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அந்த குடும்பத்துக்கு, கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார். கடந்த ஜூன் 2ம் தேதி, தி.மு.க., உறுப்பினரான சரிதா, தன் சொந்த ஊரான இறையனுார் கிராமம் செல்வதற்கு, திண்டிவனத்தில் சாலையை கடந்தபோது, பைக் மோதி இறந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சரிதாவின் கணவர் கண்ணனிடம், முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை