உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி மட்டுமல்ல வேட்பாளர்களையும் பரிந்துரைக்கிறது தி.மு.க.,

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி மட்டுமல்ல வேட்பாளர்களையும் பரிந்துரைக்கிறது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து இருப்பதுடன், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து, தி.மு.க., பரிந்துரை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற, தி.மு. க., திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தொகுதியிலும் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில், தி.மு.க., உறுதியாக உள்ளது. எனவே,இந்தாண்டு இறுதியில் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. https://www.youtube.com/embed/iqYtspfQQFQஇதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் செல்வாக்கு உள்ள நபர் யார்; யாரை வேட்பாளாராக நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற அடிப்படையில், தொகுதிக்கு மூன்று பேர் பட்டியலை, கட்சிக்கென பிரத்யேகமாக இயங்கும் ஆய்வு நிறுவனம் வாயிலாக தி.மு.க., சேகரித்து வருகிறது. இதேபோல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியலும், தி.மு.க., தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், அக்கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற விபரமும், அதில் இடம்பெற்றுள்ளது. அந்த பட்டியலை வழங்கி, அதன்படி வேட்பாளரை நிறுத்துமாறு, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, அந்த கட்சி தலைமைதான் நிர்வாகிகளுடன் ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும். ஆனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கிற கட்சி எப்படி தேர்வு செய்ய முடியும்?தேர்தல் நெருக்கத்தில் இதுகுறித்த தகவல்களை தி.மு.க., தரப்பு, கூட்டணி கட்சியினரிடம் சொல்லி நெருக்கடி கொடுத்தால், அதை ஏற்க கூட்டணி கட்சிகள் மறுப்பு தெரிவிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Haja Kuthubdeen
மே 18, 2025 19:36

திமுக அல்லக்கை கூட்டணி கட்சிகள் இந்த நான்கு வருடங்களாக மக்கள் பிரச்சினைகள் எதிலுமே பங்கேற்கவே இல்லை...வரும் தேர்தல் இவர்களுக்கு பாடமாக அமையனும்.


kannan sundaresan
மே 18, 2025 13:44

அனைத்து கூட்டனி கட்சிகளும் திமுக போட்டியிட வேண்டும் என்று சொல்லிடுங்க. சோலி முடிஞ்சது.


SIVA
மே 18, 2025 12:25

திமுக லெட்டர் பேடு கூட்டணி கட்சிகள் என்று சொல்லுங்கள் ....


Anbuselvan
மே 18, 2025 09:30

சபாஷ் திராவிட மாடல் ஜனநாயகம்


ஆரூர்
மே 18, 2025 09:20

காங்கிரசின் மாநிலத் தலைவரையே திமுகதான் தேர்ந்தெடுத்தது என்பர். அதற்குக் கூட பெருந்தொகை கைமாறியிருக்கலாம்.


V Venkatachalam
மே 18, 2025 13:56

ஆமா பெருந்தகைக்கு பெருந்தொகை கை மாறியது சிதம்பர ரகசியம். அத்தோட போச்சா என்றால் அது இல்லை. கழிவுநீர் அகற்றும் பணியாளர்களுக்கென்று சொல்லி அதை கழிவு நீரே அகற்றாத பெருந்தகைக்கு தாரை வார்த்திட்டாங்க. அது சவுக்கு சங்கர் கைங்கர்யத்தில் கோர்ட்டில் இருக்கு..


lana
மே 18, 2025 09:01

இந்த உலகத்தில் ஜனநாயக முறைப்படி சமூகநீதி மற்றும் சமச்சீரான கட்சி நடத்தும் ஒரே ஒரு கட்சி விடியல் கட்சி மட்டுமே. வேறு எங்கும் கிளைகள் இல்லை.


VENKATASUBRAMANIAN
மே 18, 2025 08:13

இதுதான் கொத்தடிமைகள் இன் நிலைமை. காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்டுகள் புரிந்து கொண்டால் சரி.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 18, 2025 08:13

விடியல் சார் 2000 குடுப்பார், அடிமைகள் ஓட்டு அள்ளி போடும், 240 சீட் உறுதி


R. SUKUMAR CHEZHIAN
மே 18, 2025 06:38

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ போன்றவர்கள் திமுகவின் அடிமைகள், திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள், கொலை கொள்ளை, பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் இன்னும் பல தீய செயல்களுக்கு இவர்களும் உடந்தை, விடியல் திமுகவிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு ஒப்புக் அறிக்கை கொடுத்து கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இவர்கள் பேசாமல் கட்சியை கலைத்து விட்டு திமுகவில் ஐக்கியம் ஆகிவிடலாம்.


Kasimani Baskaran
மே 18, 2025 06:37

அதாவது தீம்க்கா பல கட்சிகளை குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. கம்மிகளுக்கு கொடுத்த குத்தகை 25 கோடி. சூரிய வெளிச்சம் இருக்கும் பொழுது டார்ச் எதற்கு என்று ஒருவர் கிட்டத்தட்ட கட்சியை ஓரங்கட்டி வைத்து விட்டார். சைமனுக்கு இரண்டு லட்சுமிகளை வைத்து பாடம் எடுத்தார்கள். அடுத்து ரோல்ஸ் ராய்ஸ் தம்பியை எதை வைத்து கட்டுப்படுத்துவார்களோ தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை