உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்

ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உரிமை கோரும் தி.மு.க., ஜாதியை பற்றி பேசக்கூடாது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தவறு

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில அமைச்சர்களும் உள்ளனர். நடுத்தர மக்கள் மீது வரி விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டிக்கு முன்னர் வாட் வரி, மாநிலங்களில் சுங்க வரி உட்பட பல வரிகள் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியை சேர்த்து தான் ஜிஎஸ்டி வந்துள்ளது. ஆனால், ஜிஎஸ்டிக்கு பிறகு தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0miazg28&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெளிப்படை

ஜிஎஸ்டி.,க்கு முன்பு இருந்ததை விட தற்போது வரி குறைந்துள்ளது. இந்த வரியை குறைக்க தான் அமைச்சர்கள் குழு உள்ளது. முன்பு வரி விதிக்கப்படுவதை காட்டியிருக்க மாட்டார்கள். தற்போது வரி குறித்து தெளிவாக குறிப்பிடுவதால் தற்போது வரி கட்டுவது போல் தோன்றுகிறது. வரி முன்பும் இருந்தது. தற்போதும் உள்ளது. தற்போது வெளிப்படையாக காட்டுவதினால், வரி வந்ததாக நினைப்பது தவறு. ஜிஎஸ்டி எடுக்கும் தீர்மானம் மாநில அமைச்சர்களின் ஒப்புதலுடன் தான் எடுக்கப்படுகிறது. நான் மட்டும் தனியாக கேட்க முடியாது.

சமத்துவம்

ஜாதி வாரி கணக்கெடுப்பில் தி.மு.க., வெற்றியை தேடுகிறதா? அக்கட்சிதான் சமத்துவம் என்கிறது. அக்கட்சி ஜாதி பற்றி பேசக்கூடாது. அனைத்திலும் அரசியல் ரீதியாக லாபத்தை தேட முயற்சி செய்யக்கூடாது. தமிழகத்தில் சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் இன்றும் ஜாதி பெயருடன் பலகைகளை பார்க்கிறேன். குடிநீரில் மனித கழிவு கலப்பது தமிழகத்தில் தான் நடந்தது. வட மாநிலங்களில் நடக்கவில்லை. அரசியல் ரீதியாக பார்க்காமல் அதில் கிடைக்கும் தரவுகளை வைத்து பின் தங்கிய மக்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என யோசிக்க வேண்டுமே தவிர, நாங்கள் வென்றோம், தோற்றோம் எனக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.

நன்றி

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதாக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பணம் ஒதுக்கியவுடன் நன்றி என தெரிவித்தனர். தனிப்பட்ட முறையில் நன்றி என தெரிவிக்கின்றனர். வெளிப்படையாக இல்லை என்கின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

சிரிப்பு

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை விமர்சிப்பதற்கு முன்னால், நீதிமன்றம் மூலமாக அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் எந்த கூட்டணிக்கு வந்தது. ஊழல் காரணமாக சுப்ரீம் கோர்ட் வரை சென்று அமைச்சர் ஒருவரும், இன்னொரு விஷயத்திற்காக மற்றொரு அமைச்சரும் பதவி விலகினர். அவர்கள் பதவி விலகி கொண்டு உள்ளனர். ஊழல் கூட்டணியினர் எங்கள் கூட்டணியை பற்றி பேசுவது என்பது எனக்கு சிரிப்பு வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

thehindu
மே 03, 2025 13:35

அலைகிறார்கள் பாஜவினர்


மூர்க்கன்
மே 03, 2025 12:26

இந்த ஆண்ட்டி பொய் சொல்லும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் கூச்சம் என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் இவ்வளவு பொய் சொல்லும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். கிஸ்தி என்னும் கிஸ்திக்கு முன்னால் வரி அதிகம் என்பதே பெரிய உருட்டு. வாட் வரி அதிகபட்சம் 12 சதவீதம்தான் ஆனால் இப்போ 28 சதவீதம் அதை 36 க்கு உயர்த்த பரிசீலனையாம். இந்த அம்மணியை அன்னைக்கே ஆல் பாஸ் ஆக்காம விட்டு இருந்தா இன்னிக்கு நாட்டுக்கு நல்ல மந்திரியாவது கிடைத்து இருப்பாங்க.. உண்டியல்ல காசு போடக்கூடாது கோவிலுக்குள்ள தட்டை வைத்து பிச்சையெடுக்கும் உயர் சாதியினருக்கு பிச்சை இட சொன்ன இந்த எச் நமக்கு வர வேண்டிய பணத்திற்கு பொதுவெளியில் நன்றி வேணுமாம். ஏன் நீதான் தைரியமான ஆள் தானே ?? யார் நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்புனாங்கன்னு பொது வெளில சொல்ல வேண்டியதுதானே ?? வேங்கைவயல் சம்பவம் பற்றி சரியான முடிவு வந்தாச்சு அதை இன்னுமா உருட்டுறீங்க?? அங்கே சாதி கரணம் அல்ல தனிப்பட்ட நபர்களின் தவறு என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. உங்க ஆட்சி நடக்குற மாநிலங்களில்தான் தலித் மனிதர்களின் மீது சிறுநீர் கழித்த சம்பவமும் அதன் பிறகு ஜிகினா வேலை செய்தார் சிவராஜ் சவுஹான் என்பதை மக்கள் மறக்க வில்லை. பெரியார் பற்றி நாடாளுமன்றத்தில் இஷ்டத்திற்கு பேசுற?? என்ன திமிரா? அவர் சரியாதான் சொன்னாரு?? சமஸ்கிருதம் படித்தால் எண்ணத்தையாவது உளறி கோவிலில் பிச்சை எடுக்கலாம் தமிழ் மட்டும் படித்தால் அதை கூட செய்ய முடியாதுன்னார்?? இது உன் மண்டைக்கு புரியலையா?/ இன்னைக்கும் தமிழ் ஆர்வலராக இருக்கும் தந்தை கூட தன் பிள்ளையை இவாறு கண்டிப்பது சாதாரணமா நடக் கிறதுதான் ?? கணினி படி ஆங்கிலம் படி என்று அறிவுறுத்துவது சொல்வது ஒரு தந்தையின் அக்கறை மற்றும் கடமை என்றே எடுத்து கொள்ள வேண்டும். அகோரி பசியால் வாடும் எடிட்டர் அனைத்தையும் சாப்பிட வாழ்த்துகள்.


ஆரூர் ரங்
மே 03, 2025 12:49

வாட் மட்டுமல்ல எக்சைஸ் நுழைவு வரி, ன்னு 17 வகை வரிகளையும் சேர்த்தால் மொத்தம் 50 சதவீதம் வரை செலுத்திக் கொண்டிருந்ததை வசதியாக மறைக்கிறார் . அவற்றுக்கு INPUT கிரெடிட் கூட கிடையாது. திராவிட மாடல் பொய் கூறுவதை தவிர்க்கவும்.


நண்பன்
மே 03, 2025 08:48

ஆமாம். ஒசந்த சாதிக்காரர் நீங்கதான் பேசமுடியும்.


c.mohanraj raj
மே 03, 2025 00:17

உண்மைதான் எந்த ஜாதியில் சேர்ப்பது


kamaraj jawahar
மே 02, 2025 22:31

சங்கிகள் வயிறு பத்தி எறிவதை பார்க்க கவலையாக உள்ளது


மூர்க்கன்
மே 03, 2025 14:56

ஆரூரங் என்னதான் உருட்டுனாலும் உண்மையை மறைக்க முடியாது பலவித வரிகள் ஐம்பது சதவீதமா?? வாட் வரியே எல்லா வரிகளும் கலந்த கலவைதான்?? இதற்கு எதற்கு ஆதாரம் விலைவாசி 2014க்கும் 2024க்கும் சின்ன ஒப்பீடு வைத்தாலே சின்ன குழந்தைக்கும் புரியுமே?? எந்த காலத்திலும் ஐம்பது சதவீதம் வரி என்பதெல்லேம் மஹா பொய். பொய் சொல்வதில் அந்த அம்மாவையே விஞ்சி விடுவாரோ??? மருத்துவத்திற்கும் மருந்துகளுக்கும் வரி விதிச்சது சாதனைனு சொன்னீங்கன்னா?? அதுதான் உண்மையான வேதனை??


sridhar
மே 02, 2025 21:02

In fact , எதைப்பத்தியும் பேசக்கூடாது .


K.n. Dhasarathan
மே 02, 2025 20:58

அம்மா நிதி அமைச்சர் அவர்களே தி மு க ஜாதியை பற்றி பேச கூடாது என்றால் நீங்கள் எதைப்பற்றியும் பேச கூடாது பின்புற வாசல் வழி எம் . பி ஆனவர் நீங்கள், எந்த தேர்தலிலாவது நிண்றதுண்டா ? மக்களை சந்திக்க திராணி உண்டா ? குறிப்பாக தமிழ் மக்களை சந்திக்க தைரியம் உண்டா ? இன்னும் கூட காலம் உண்டு இப்போது கூட தமிழ் நாட்டில் தேர்தலில் நிற்க முடியுமா ? டெபாசிட் கூட கிடைக்காது, அல்ல அல்ல, நோட்டா வுக்கு கிடைத்த ஒட்டு கூட கிடைக்காது, பொய் ஜே பி யின் ஆதரவில் காலம் தள்ளும் நீங்கள், என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் ? உங்களுக்கு சிரிப்பு வருகிறது என்பதுதான் சிரிப்பு, மக்கள்தான் உங்களை பார்த்து, பேச்சை கேட்டு சிரிக்கிறார்கள்.


aaruthirumalai
மே 02, 2025 20:39

உண்மை !அந்த குடும்பம் அதில் பல்கலைகழகம்...


தமிழ்வேள்
மே 02, 2025 19:56

எவ்வளவு கேவலமாக மிதியடி பூஜை வாங்கினாலும் திமுக திருந்த போவதில்லை... தோல் தடித்து போன கும்பல்... ஒவ்வொரு உதைக்கும் காசு தருவதாக சொன்னால் அதற்காகவே லாரி வைத்து ஆள் கூட்டி வரும் கட்சி திமுக...


ஆரூர் ரங்
மே 02, 2025 19:50

ஒரே தெலுங்கு சாதிக்கு தொடர்ந்து முதல்வர் பதவியில் இடஒதுக்கீடு கொடுத்த சாமான்ய கட்சியையே திட்டலாமோ? இது உங்க தமிழ் ஆரியர்களின் சதி.


Murugan Guruswamy
மே 02, 2025 20:44

தெலுங்கு மற்றும் ஆரியன்ஸ் . ஆனால் தமிழ் மக்களை மட்டும் ரெண்டு பேருமே சேர்ந்து தாக்குதல் நடத்துறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை