உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள்கள் மூலமாக தி.மு.க., வந்த செருக்கு., ஓட்டு மூலமாக நொறுக்கு: நிர்மலா சீதாராமன் ஆவேசம்

போதை பொருள்கள் மூலமாக தி.மு.க., வந்த செருக்கு., ஓட்டு மூலமாக நொறுக்கு: நிர்மலா சீதாராமன் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பா.ஜ.,வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலவீதி மூல அனுமார் கோவில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார். சுமார் ஒரு கி.மீ.,துாரம் வாகனத்தில் பொதுமக்களிடம் கையசைத்த படி ஓட்டு கேட்டார். பிறகு தேரடியில் நின்று அவர் பேசியதாவது; தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும். அந்த மாறுதல் ஏற்பட வேண்டும் என்பது மக்கள் மனதில் இருக்கிறது. தமிழகத்தில், உண்மைக்கு புறம்பாக நிறைய விஷயங்களை பேசி வருகிறார்கள். கச்சத்தீவு விஷயத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். அதை பற்றிய அம்சம் குறித்து மக்கள் பேச வேண்டும். விவாதம் செய்ய வேண்டும். கச்சத்தீவு பரம்பரை பரம்பரையாக மீனவர்கள் மீன்பிடித்த இடம். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததால் தான் இன்றைக்கு வரை மீனவர்கள் பிரச்சனை தீராமல் உள்ளது என்ற உண்மையை நம் அனைவரும் பேச வேண்டும். தி.மு.க.,வை கேள்வி கேட்க வேண்டும். இன்றைக்கு பிரதமர் மோடி கேள்வி கேட்கிறார் என்பது அல்ல. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் பதில் இல்லை. இது குறித்து இன்றைக்கு வரையும் தி.மு.க., பேசவில்லை. அப்போது இருந்த முதல்வருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தெரிந்தும், கையொழுத்து போடும் வரை பேசவில்லை. ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல், தமிழக மக்களுக்கு உண்மையை சொல்லாமல் இருந்து விட்டார். தி.மு.க., செய்கின்ற ஒவ்வொரு தமிழக விரோத செயல் குறித்து எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். உண்மைக்கு புறம்பாக தகவல்களை தி.மு.க., கூறி வருவதற்கு இது ஒரு உதாரணம். சமீபத்தில் தி.மு.க., அமைச்சராக இருந்த ஒருவரே, அந்த குடும்பம் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதை எங்கே வைப்பது என தெரியாமல் அலைந்துக்கொண்டு கொண்டுகிறார்கள். இது குறித்து ஊடங்கள் கேள்வி கேட்டது. அதற்கும் கூட இன்றைக்கு வரை பதில் இல்லை. அதற்கு பதில் அந்த அமைச்சரை வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். தி.மு.க., செய்கின்ற மக்கள் விரோத செயலுக்கு இப்போது வரைக்கு பதில் அளிக்க மாட்டார்கள். காவிரியில் தண்ணீர் இல்லை. ஆனால், சாராயம் தண்ணீர் போல கொட்டுகிறது. பல ஆண்கள் சாராயத்திற்கு அடிமையாகி போனதால், குடும்பங்கள் கெட்டுக்கொண்டு இருக்கிறது. முழுமையாக சாராயத்தை ஒழிக்கவிட்டாலும், சீர்திருத்தங்களுடன் விற்பனை செய்து இருந்தாலும் பரவாயில்லை. குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல சாராயம் வருகிறது. இதை நிறுத்த முடியவில்லை. இன்றைக்கு போதை பொருட்களை டன் கணக்கில் கொட்டுகிறார்கள். இதிலும், அந்த குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. போதை பொருள் விற்பனை செய்த ஆதாயத்தை வைத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா எடுத்தார்கள். இதற்கு கோபாலபுரம் குடும்பம் இன்றைக்கு வரையும் அது தொடர்பாக எந்த பதிலும் சொல்லவில்லை. போதை பொருள் தொடர்பாக முதல்வர் பதில் சொல்ல வேண்டும். போதை பொருள்கள் மூலமாக தி.மு.க., வந்த செருக்கு., ஓட்டு மூலமாக நொறுக்கு. டி.எம்.கே., என்பது திராவிட முன்னேற்ற கழகம் என்பது, ட்ரக் முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. ட்ரக் நமது இளைஞர்களை இன்னும் 10 ஆண்டுகளில் மொத்தமாக அழித்து விடும். ட்ரக் ஆதாயம் மூலமாக எனது குடும்பம் வளரும். தமிழகத்தில் இளையதலைமுறைகள் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன இருந்து வருகின்றனர். பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,சை ஓட ஓட விரட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். போதை விற்பனை செய்யும் தி.மு.க.,வை நாம் ஓட ஓட விரட்டுவோம் இவ்வாறு அவர் பேசினார். நிர்மலா சீதாராமன் பிரச்சார வாகனத்தில் வரும் போது வழியில் இருந்த மூல அனுமார் கோவில், கோதண்டராமர் கோவில், பங்காரு காமாட்சி, காசிநாதர் கோவில், கொங்ணேஷ்வர் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமியை வாகனத்தில் இருந்த படி வணங்கினார். பொதுமக்கள் மலர்கள் துாவி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

தமிழ்வேள்
ஏப் 13, 2024 12:50

இன்டர்போல் விசாரணை வளையத்தில் திருட்டு திமுக கும்பல் சின்னவர் , சின்ன அம்மிணி சிக்கும் பொது இதை சொல்லுங்கள் நண்பரே இந்த கேஸ் மிக ஆழமானது வெளி நாடுகளில் இவர்கள் இருந்தால் , கண்டிப்பாக கழுத்துக்கு தூக்கு கயிறு உண்டு இந்தியா என்பதால் இந்த அளவுக்கு தாமதம் வில்லங்க சேற்றில் சிக்கி கழுத்து வரை மூழ்கியுள்ள திமுகவை இனி எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டுகிறது


N SASIKUMAR YADHAV
ஏப் 13, 2024 12:48

இங்கே பணம்மென வாயை திறப்பவர்கள் மழைவெள்ளத்துக்கு கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்க வக்கில்லை.... இப்பதான் தமிழகத்தின் பொக்கிஷமான பல லட்சம் கோடி ரூபாய்களை ஊழலில்லாமல் கையாளும் நிதியமைச்சரிடம் கேள்வி கேட்கிறானுங்க தமிழகத்தில் வசூலாகும் வரிபணத்துக்கு வெள்ளையறிக்கை கேட்க வேண்டும் திமுக சரியான தகவலை அளித்துவிட்டால் திமுகவை பாராட்டலாம்


Sivashankar
ஏப் 13, 2024 10:00

போதையின் பாதையில் தமிழகம் என்பது உண்மை


Sivashankar
ஏப் 13, 2024 09:57

போதையின் பாதையில் தமிழகம் என்பது உண்மை


raja
ஏப் 13, 2024 06:42

தமிழனை மதுவுக்கும் போதைக்கும் அடிமையாக்கி தமிழகத்தை கொள்ளை அடிக்கும் திராவிட மாஃபியா கும்பலை அடித்து விரட்டுவோம்


Kasimani Baskaran
ஏப் 13, 2024 06:41

ஒரு கையில் சர்காரியா கமிசன் என்ற கத்தி, அடுத்த கையில் எங்களுக்கும் கச்சத்தீவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பத்திரம் - இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டினால் எதற்கும் துணிந்தவர் எப்படி சர்காரியா கமிசன் அறிக்கையை மீது நடவடிக்கை வேண்டும் என்பார்? சுய நலம் முன்னால் நின்றது - மீனவர்கள் நலமும் மறந்து போனது இன்னும் கூட தமிழனா, குடும்பமா என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் தியாகம்


venugopal s
ஏப் 13, 2024 05:06

ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் மீது இது போன்ற பொய்யான, பயங்கரமான போதைப்பொருள் குற்றச்சாட்டை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சுமத்துவது அவர் தரத்தை கூறுகிறது. அது உண்மை என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில அரசின் மீது டிஸ்மிஸ் உட்பட கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூற வேண்டும். அல்லது அவருடைய குற்றச்சாட்டு பொய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 13, 2024 06:35

ஆதாரம் கோர்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது அத்னால்த்தான் கைது நடவடிக்கை அயலக அணிதான் முடிவின் ஆரம்பம் ஆபிரிக்காவில் தீம்காவுக்கு என்ன வேலை என்று விளக்கினால் நல்லது


S.Govindarajan.
ஏப் 13, 2024 07:02

பிடிபட்ட ஜாபர் சாதிக் எந்தக் கட்சிக்காரர் அவரோட தொடர்பு உள்ளவர்கள் யார் யார் கூறுங்க பார்ப்போம்


sundar
ஏப் 13, 2024 08:40

waiting for proper opportunity with evidence to dismiss this govt.


vaiko
ஏப் 12, 2024 23:36

தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்த போது நீ செய்த உதவி என்ன?


vaiko
ஏப் 12, 2024 23:35

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடக எம்பீக்களுடன் சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்தது யார்?


Rangs
ஏப் 13, 2024 02:41

கடந்த வருடங்களாக, காவிரி பிரச்னையை தமிழக மக்கள் மறக்கும் அளவிற்கு தண்ணீர் திறந்து விட்டது யார்? பாஜக கடந்த தேர்தலில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சொன்னது யார்? ராகுல் தமிழ்நாட்டிற்கு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்று கூறியது யார்? காங்கிரஸ் இன்னும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து மணல் கொள்ளை அடிப்பது யார்? திமுக


G.Subramanian
ஏப் 12, 2024 22:57

வந்தாலே மகராசி…நிர்மலா இந்த முரட்டு பேச்சுக்கு நீ தானே ராசி கேள்விக் கணைகளைத்தொடு உதயநிதி தலையை பிய்த்துக் கொண்டு செங்கல்லை போட்டு விட்டு ஓடி விடுவான் மோடியை தொடை நடுங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவருக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் கன்னாபின்னா என்று பேசுவது சகிக்க முடியவில்லை கோடிகளைத்தேடி ஸ்டாலின் துபாய் சென்ற மர்மம் போதை மன்னர்களை சந்திக்கத் தானா? திமிர் பிடித்து பேசும் பழநிச்சாமியும் சாதாரண ஆசாமி இல்லை இரண்டு நாளில் தேர்தல் பிரசாரத்தில் திராவிடத்தை நாறடிக்க நிர்மலா உனக்கு நிகர் ஏது?


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ