உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி பார்முலாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை களமிறக்கும் தி.மு.க.,

மோடி பார்முலாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை களமிறக்கும் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அரசு உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கியது போல், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு 'சீட்' வழங்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fqjzz2rn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. தேர்தலில் எதிர்பார்த்தபடி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தன் அமைச்சரவையில், முக்கிய துறைகளில் பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளித்து, அமைச்சராக்கி உள்ளார்.இதே போல, தி.மு.க.,வுடன் நெருக்கமாக உள்ள ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கு வரும் சட்டசபை தேர்தலில் சீட் வழங்க, தி.மு.க., தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக இருந்தோரை, தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற்று வருவோரை, எதிர்கால தி.மு.க., அமைச்சரவையில் அமைச்சராக்கவும் மேலிடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க., தலைமையின் குடும்பத்திற்கு நெருக்கமாக உள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளில், அரசியல் பின்னணி உள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கட்சி மேலிடத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இருவருடைய பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இருவரில் ஒருவரை, திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும், சென்னையில் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கலாம் என்றும் கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.தலைமையின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், மேலும் சிலருக்கும் கூட வாய்ப்பு கிட்டலாம். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ramaswamy Jayaraman
ஜூன் 06, 2025 15:14

நேர்மையான IAS&IPS அதிகாரிகள் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஊழலை சட்டபூர்வமாக செய்ய தெரிந்த அதிகாரிகள் அரசியலுக்கும் வந்து மேலும் ஊழல் செய்வார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதி பண மூட்டைகளுடன் பிடிபட்டார். அந்தமாதிரி ஆட்கள் நிச்சயம் அரசியலுக்கு கூப்பிட்டால் வருவார்கள். மக்கள் வரி பணம், மேலும் கொள்ளை போகும்.


Krishnamurthy Srinivasan
ஜூன் 06, 2025 11:12

sc judges to IAS officers are all in the same category of politicians, instead of three pillars we can merge all pillars in to one pillar and our country will become number one in the next day itself. all are experts only.


ramani
ஜூன் 06, 2025 06:02

மோடிஜியிடமிருந்து நேர்மையை பின்பற்றினால் நன்றாக இருக்கும். அதுதான் இல்லையே


ramani
ஜூன் 06, 2025 06:00

மோடிஜியை பின்பற்றலாம். ஆனால் நேர்மை எங்கே இருக்கிறது நம்மாளிடம். நேர்மை தான் சுடாலினிடம் இல்லையே


ramani
ஜூன் 06, 2025 06:03

முதலில் நேர்மையை பின்பற்றட்டும்


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 04:31

பரம்பரை களவாணிகளும் படித்த களவாணிகளும் இணைந்து வேலை செய்ய திட்டம். வெளங்கிடும்.


Kasimani Baskaran
ஜூன் 06, 2025 03:46

கொள்ளைக்கூட்டத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இனி உள்ளிருந்து ஆதரவு... இளையவர்களை மட்டும் பதவியில் அமர்த்தினால் பழைய மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டுமா? கண்டிப்பாக இல்லை. திம்க்கா ஒருபொழுதும் திருந்தது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.


Raj S
ஜூன் 05, 2025 23:53

அவருக்கு தானா வந்து செஞ்சாங்க... கோண வாயன் கும்பல் மிரட்டி செய்ய வைக்கிறாங்க... ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லையா??


சிட்டுக்குருவி
ஜூன் 05, 2025 18:23

மோடி பார்மூலாவை பின்பற்றுவது தவறில்லை. ஆனால் நேர்மை ,உழைப்பு இருக்க வேண்டும் . அதற்கு தகுதி இருக்கும் ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளில் சகாயம் அவர்களே முதன்மையானவர் . சகாயம் அவர்கள் உங்கள் கொள்ளைக் கூட்டத்தில் சேர விரும்புவாரா? அவரை சேர்த்து ,லஞ்ச ஒழிப்பு துறை ஏற்படுத்தி அதற்கு மந்திரியாக நியமிப்பேன் என்று ஒரு அறிக்கை விடுங்கள் பார்க்கலாம் .


தமிழ்வேள்
ஜூன் 05, 2025 21:07

ஹி..ஹி..ஹி.... அல்லேலூயா சகாயம் பார்த்த வேலையை பற்றி உங்களுக்கு முழுவதும் தெரிய வாய்ப்பில்லை...இவர் வேலை பார்த்த துறைகளில், தொடர்புடைய தொழிலதிபர்களை நிர்ப்பந்தம் செய்து, சர்ச் கும்பலுக்கு கட்டாய நன்கொடை, அநியாய தசமபாகம் பிடுங்கி கொடுத்த பேர்வழி...தேன்...புறங்கை நக்கும் கதை இங்கும் உள்ளது... அடித்த காசை காபந்து பண்ண ஒரு கட்சி.. திருட்டு சபை கட்டளை படி ஜோசப்பு விஜய்-கும்பலில் ஐக்கியம்..தடஸ் ஆல்..


Barakat Ali
ஜூன் 05, 2025 17:18

பணம் குவிக்க நூதனமான வழிகளைச் சொல்லித் தருவார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை