உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 வழிச்சாலை திட்டத்தை தடுத்த திமுக இப்போது கேட்கிறது: இபிஎஸ்

8 வழிச்சாலை திட்டத்தை தடுத்த திமுக இப்போது கேட்கிறது: இபிஎஸ்

ஒசூர்: '' சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்திய திமுக, இப்போது அந்தத் திட்டத்தை கேட்கிறது,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார். 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் முனைவரோடு கலந்துரையாடினார்.அப்போது இபிஎஸ் கூறியதாவது: உங்களுக்கு 8 வழிச்சாலை திட்டம் பற்றி தெரியும். இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச் சாலையாக 10 ஆயிரம் கோடி ரூபாயில் அந்த திட்டத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை கொடுத்தோம். 94 சதவீத விவசாயிகள் அதை ஆதரித்தார்கள். காஞ்சிபுரத்தில் 20 லட்ச ரூபாய் நிலத்துக்கு 1 கோடி ரூபாய் வரை கொடுத்தோம். தென்னை மரத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தோம். ஆனால் அதை நிறைவேற்றும் நேரத்தில் மேலும் பல பிரச்னைகள் வந்தன. பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால் அந்த திட்டம் கைவிட்டு போய்விட்டது. இப்போது திமுக அரசு இந்த திட்டம் வேண்டும் என்று கேட்கிறது. சாலையைக் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, இப்போது இந்த சாலை வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை