உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026ம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுக்குதான் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்யவேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து அவற்றைத் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டம் இன்று (அக் 28) மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்க உட்கார்ந்திருக்க உங்க மனசுல, இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது. என்னடா, தலைவரும் சும்மா இருக்க மாட்றாரு, நம்மையும் சும்மா இருக்க விடமாட்றாருனு சிலர் நினைப்பீங்க. சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம். அது தேக்கம். உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிட்டே இருக்க வேண்டும். அதுதான் இயக்கம்.

7வது முறை ஆட்சி

நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, ''என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி'' என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம். உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம். என்னோட அழைப்பை ஏற்று, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்க மாவட்டத்துக்கு, நகரத்துக்கு, கிராமத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.

நம்பிக்கை

நான் சொன்னதை சொல்லுங்க. நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்க. ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவர்களை நம்பி இருக்கேன் என்று சொல்லுங்க. 2026ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறன். 2021ம் ஆண்டு தேர்தல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்ட தேர்தல்.

நிரூபிக்கணும்

2026ம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தை பாஜ, அதிமுகவிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக-பாஜ கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவங்க கட்சிக்காரங்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. நம்ம வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

s. mani, kovai.
அக் 29, 2025 05:47

திமுக முட்டு சந்தில் நிற்பது உறுதி.. ஆசை இருக்கு தாசில் செய்ய... ஆனா..


Ramesh Sargam
அக் 28, 2025 23:29

அப்படி ஒரு தவறை தமிழக மக்கள் செய்தால், பிறகு தமிழகத்தை அந்த கடவுளே நினைத்தாலும் காப்பாற்றமுடியாது. மக்களே, திமுக கொடுக்கும் போலியான, பொய் வாக்குறுதிகளை நம்பவேண்டாம். அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் இலவசங்களை வாங்கவேண்டாம். இலவசங்கள் அவர்கள் கொடுப்பது உங்களின் வரிப்பணத்திலிருந்து, திமுகவின் கட்சி பணம் இல்லை. அதை நன்றாக புரிந்துகொண்டு, யோசித்து வாக்களியுங்கள். தாமரை மலரட்டும். நல்லாட்சி பிறக்கட்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 28, 2025 22:28

நீங்க என்ன சாதனை செஞ்சீங்களோ தெரியாது. ஆனா கோயம்புத்தூர் மக்களுக்கு நல்ல ரோடுன்னா எப்படி இருக்கும்ங்கறதே மறந்து போச்சு. எல்லா ரோடுலேயும் பத்து மீட்டருக்கு ஒரு பள்ளம் இருக்கு. திருப்பூருக்கு போட்டியா எல்லா தெருவுலேயும் நுறு மீட்டருக்கு ஒரு குப்பை மலை கிடக்குது. கழக கமிஷனருக்கு கட்சி வேலை பார்க்கவே நேரம் போதலை. கார்ப்பரேஷன் வேலை பார்க்க நேரம் இல்லை. நீங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தா, உங்க அப்பா கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி நீங்க கோயம்புத்தூரை கேரளாவுக்கு கொடுத்தா குறைந்த பட்சம் ரோடாவது நல்லா இருக்கும்.


Easwar Kamal
அக் 28, 2025 20:16

அப்பனும் மவனுக்கும் சிறப்பா மத்தியில் சிறைச்சாலை காத்து கொண்டு இருக்கிறது. இன்னும் 6 மாதம் தான். உடம்பை நல்ல தேத்தி வைத்து கொள்ளுங்கள்.


N S
அக் 28, 2025 19:20

அப்பா, "ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவர்களை நம்பி இருக்கேன் என்று சொல்லுங்க." குடும்பம் நன்றாக இருந்தால் தான் கட்சி பிழைக்க முடியும். தமிழக மக்கள் மேல் உள்ள நம்பிக்கை என்னவென்றால், அவர்களுக்கு போடும் ரொட்டி துண்டு அன்றைய பசியை போக்கும். பின்பு மாநிலத்துக்கு மறுபடியும் "அல்வா".


சிட்டுக்குருவி
அக் 28, 2025 18:46

போதுமைய்யா போதும் .உழைத்து உழைத்து இளைத்துவிட்டீர்கள் . நன்மை தீமைகளை பிரித்துப்பார்க்கும் வயதை கடந்து விட்டீர்கள் .இனிமேல் இளைப்பாறுங்கள் .


cpv s
அக் 28, 2025 18:26

no more need your government in future for tamil nadu


Anbarasu K
அக் 28, 2025 17:53

அப்பா அப்பா ப்ளீஸ் போதும் பா எங்களை விட்டுருங்கப்பா


vbs manian
அக் 28, 2025 17:51

தொழில் உற்பத்தி இரவல் வேலை வாய்ப்பு உயரவில்லை. இது ரோபோட் செயற்கை நுண்ணறிவு யுகம். இரண்டு மொழி கொள்கையால் மாணவர்கள் கிணற்று தவளைகள். மின் உற்பத்தி உள்ளூரில் இல்லை. அடாவடி விலைக்கு வெளியில் வாங்கல். ஒன்று வறட்சி இல்லையென்றால் வெள்ளம். விவசாயி நொந்து நூல். பெரு நகரங்களில் மக்கள் முடங்கி மூச்சுத்திணறல். . கொலைகள் செய்தி வராத நாளே இல்லை.வன்முறைக்கு போலீசே ஆளாகிறார்கள். மணற்கொள்ளை குறுநில மன்னர்கள் சாம்ராஜ்யம். கருக திரு உள்ளமோ கதிரேசா.


Anbarasu K
அக் 28, 2025 17:51

அப்பா வுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையப்பா உங்கள் வீட்டு பிள்ளைங்க நலமா இருக்கோம் இதுவே போதும் அப்பா