உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.21ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு

ஜன.21ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு

சென்னை:தி.மு.க., வெளியிட்ட அறிவிப்பில் 'மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் தள்ளி வைக்கப்பட்ட தி.மு.க., இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு ஜன. 21 ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடக்கும்' என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே இம்மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டதால், மாநாடு டிசம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேதியிலும் மாநாடு நடத்த முடியாதபடி, தென் மாவட்டங்களில் அதிகன மழை பெய்து, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக பாதிப்படைய செய்தது. சென்னை வெள்ள நிவாரண பணிகளை முடித்த சூட்டோடு, அமைச்சர்களும் கட்சியினரும், தென் மாவட்டங்களில் முகாமிட வேண்டிய நிலை ஏற்பட்டது.அதன் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட இளைஞரணி மாநாடு, இப்போது, வரும் 21ல் சேலத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்காக சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில், ஒன்பது லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை