உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுரவ விரிவுரையாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்: ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்வதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2tixh4yk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் 25,000 ரூபாய் மட்டுமே மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு, 1,500 ரூபாய் வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக, 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என, பல்கலை மானியக் குழு, 2019ல் ஆணையிட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், 25,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று, தமிழக கல்லுாரிக் கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது. பல்கலை மானியக் குழுவால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு 50,000 ரூபாய் ஊதியம் வழங்க முடியாது என, ஆணையரகம் கூறியுள்ளது.இது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 03, 2024 10:05

எனுங்க ஒரே விரிவுரையாளர் பல கல்லூரிகளில் கல்லாப்பொட்டியை நிரப்பினது பத்தி டாக்டரு ஒண்ணுமே பேசமாட்டேங்குறாரே. ஒருவேளை பொன்முடி ஜாதிக்காரரா இல்லே சொந்தக்காரரா?


Barakat Ali
டிச 03, 2024 09:03

யாருக்குத்தான் திமுக துரோகம் செய்யலை ??


GMM
டிச 03, 2024 08:43

பல்கலை மானிய குழு விதியின் படி விரிவுரையாளர் தேர்வு இல்லை. அப்படி என்றால், பணி நீக்கம் செய்யப்பட்ட வேண்டியவர்கள்? கொடுத்த ஊதியம் பெற்று கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். மருத்துவம் பார்க்காத மருத்துவர், இல்லாத சமூகத்திற்கு நீதி வழங்கியது போதும். இனி பொருளாதார சமூக நீதி மலரும்.


Chandrasekar Mahalingam
டிச 03, 2024 05:30

பெட்டி போகலையோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை