உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது: ராமதாஸ் பொளேர்

தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது: ராமதாஸ் பொளேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்ற தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று சமூகவலைதளத்தில் நான் குறிப்பிட்ட நன்னூல் சூத்திரம் அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொருந்தாது. நான் பா.ஜ.,வில் இருந்து விலகவில்லை. இதில் எந்த நோக்கமும் இல்லை. இது நன்னூல் சூத்திரம். தி.மு.க., அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பா.ம.க.,வுக்கு உண்டு. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w8z0y3hg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை ஆதரிக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வுக்கு பா.ம.க., மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்ற தி.மு.க.,வின் சமூகநீதி முகமூடி உடைந்துள்ளது. ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்திவிடலாம். கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடலூரில் நடக்கும் நிகழ்வு, போலீசார் செயல்பாடு களப்பிரர் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

panneer selvam
நவ 07, 2024 21:41

Please read again on court direction on census . There is no bar on conducting it by State Government .


K.n. Dhasarathan
நவ 07, 2024 20:27

ஐயா மருத்துவரே எங்கே இருக்கிறீர்கள் ? தமிழ் நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா ? அதுதான் நீதிமன்றமே சொல்லிவிட்டதே ஜாதி வாரி கணக்கை மாநில அரசு எடுத்தால் செல்லாது என்று, பிறகு ஏன் அதை பிடித்து தொங்குகிறீர்கள் ? அடுத்து, தி மு க வின் சமூக நீதி இருக்கட்டும், நீங்கள் போட்டிருப்பது சமூக நீதியா அல்லது குடும்ப நீதியா ? எந்த முக மூடி ? அதை விலக்க முடியுமா ? விபரம் தெரியப்படுத்தவும்.


Ms Mahadevan Mahadevan
நவ 07, 2024 19:48

தமிழ்நாட்டில் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவர்- காமராஜ், அண்ணா,கக்கன் போன்ற நல்லவர்கள்- இல்லாத நிலையில் குருப் குருப் ஆக ஜாதிய கட்சிகள் ஆரம்பித்து ஆளாளுக்கு நாட்டாமை செய்வது இன்னும் சிறப்பாக செய்யப்பட - ஜாதி பிரிவினையை வல்சட்க்க- நல்ல ஐடியா.


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 17:19

ஜாதிக் கட்சி நடத்துகிறவங்க லாம் சமூக நீதி பற்றிப் பேசலாமா? மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அதிகாரபூர்வமான ஆவணமாக ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டதே இந்த ஆளுக்குத் தெரியவில்லையே. தைலாபுரம் வீட்டுக்குள் வேற ஜாதிக்காரனை இவர் அனுமதிப்பாரா? இவரால் பயணடைந்த ஒரே ஒரு வன்னியரைக் காட்ட முடியுமா? ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியோட கூட்டணி. பெட்டி பெட்டி யாக பண வசூல் - இதான் ராமதாஸ், மகன் அன்புமணி, மருமகள், பேத்திகள்.


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 21:08

உண்மையில் தமிழக கார்பொரேட் குடும்பத்திற்கு தான் உங்களின் கருத்து பொருந்தி போகிறது


vadivelu
நவ 07, 2024 16:30

சாதி வாரி கணக்கு எடுத்து, அதில் அய்யர் 2%, அய்யங்கார் 1%, குருக்கள் 1% என்று வந்து விட்டால் , அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுப்பீர்களா.


என்றும் இந்தியன்
நவ 07, 2024 16:22

ஜாதிவாரி கணக்கெடுப்பை????இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால். எல்லா மதத்தில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பா இல்லை வெறும் இந்து மதத்தில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பா?? எல்லா மதத்தில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியானது. வெறும் இந்து ஜாதியில் மட்டும் கூடாது. முஸ்லீம் என்றால் ஷியா சன்னி அஹமெடியஸ் ரொஹிங்கியாஸ் .........142 ஜாதிவாரிக்கணக்கெடுப்பு கிருத்துவன் என்றால் கத்தோலிக்கன் ப்ரொடெஸ்டெண்ட் சிரியன் .....134 ஜாதிவாரி கணக்கெடுப்பு இந்து என்றால் வன்னியர் நாடார் பிராமணர் .....என்று 30 விதமான ஜாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அப்படி இல்லாமல் வெறும் இந்து மத ஜாதிக்கணக்கு கூடவே கூடாது .


GMM
நவ 07, 2024 15:55

இயலாத போது சலுகை. இயலும் போது சலுகை பணமாக திரும்ப பெறவேண்டும். ராமதாஸ், அன்புமணி மருத்துவர்கள். ஆனால் அரசியல் சுகம். மருத்துவ செலவை சில மடங்கு திரும்ப பெற முடியும். இட ஒதுக்கீடு மூலம் கல்வி, அரசு பணிகள். பணம் திரும்ப பெற முடியும். சலுகை பெறுபவர் இழைபவர் ஒருமுறை வாக்களிக்க கூடாது. இல்லாவிடில் எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது. ஊழல் இல்லாத மத்திய அரசு நிறுவி பயன் இல்லை.


Ms Mahadevan Mahadevan
நவ 07, 2024 15:37

ஆக ஜாதி ஒழியனும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. ஜாதி சொல்லி பிழைப்பு நடத்தவும் வாக்கு வாங்கவும் அரசு சலுகை தனது ஓட்டு வாங்கவும் ஜாதி யை வளர்க்கிறார்கள். எந்த ஒரு தலைவரும் லஞ்சத்தை ஒழிக்கி ரென், ரவுடீஸ்யத்தை ஒழிகிரென் , ஜாஸ்தி மத சலுகையை ஒழிகெரென் என்று நல்லதை சொல்ல தயார் இல்லை. வாழ்க தமிழ்நாடு.


Minimole P C
நவ 08, 2024 09:58

true


vadivelu
நவ 07, 2024 14:37

சாதி வாரியாக மக்களை பிரிவு படுத்துவதுதான் பிளவுவாதம். பா ஜா க இதை செய்ய தயாராக இல்லை. நாட்டை மதம் வாரியாக பாகிஸ்தான் என்று பிளவு படுத்தியாச்சு. பாகிஸ்தானையும் பங்களாதேசமாகி பிளவு படுத்தியாச்சு. மக்களை மொழியால் பிளவு படுத்தவே மொழி வாரி மாநிலங்களாச்சு. மாநிலங்களில் சாதியால் மக்களை பிளவு படுத்தியாச்சு .இன்னும் என்ன இருக்கு பிளவு படுத்த ,பிளவு படுத்தியவர் மேலும் பிளவு படுத்த , பழியை எல்லோரும் ஒன்றே என்று சொல்பவர்கள் மீது திணிக்கிறார்கள் .விந்தை


Palanisamy T
நவ 07, 2024 15:14

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதை தவறான கண் கொண்டு பார்க்கவேண்டாம் . அது காலத்தின் கட்டாயம் தேவையாயிற்று . அதனால் இதுநாள்வரை இந்திய நாட்டில் எந்த பிரச்னைகளுமில்லை. தொலக்காப்பிய நூலை அளவுக் கோலாக மதிப்பிட்டால் நம் மொழி சுமார் ஆண்டுக் ஆண்டுக் காலத்திற்கு பிந்திய பழமையான மொழியென்று தெரியும். சங்கஇலக்கிய நூலின் குறிப்பிது. காலம் நமக்களித்த அரிய செல்வம் நம் தாய் மொழி. இப்போது நம் உயிரான இம் மொழியை என்ன செய்யவேண்டும். நீங்களே சொல்லுங்கள்


SUBBU,MADURAI
நவ 07, 2024 16:34

சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்பதற்கு இந்த திராவிட மாடல் திமுக அரசுக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது ஸ்டாலின் நினைத்தால் அதை உடனே செய்து விட முடியும். ஆனால் அதில் ஒரு பெரிய இடியாப்பச் சிக்கல் இருக்கிறது அதனால்தான் அதில் ஈடுபட இந்த திமுக அரசு பம்முகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிகளையும் கணக்கிட்டால் ஒவ்வொரு ஜாதியிலும் குறைந்தபட்ச எண்ணிக்கை என வைத்துக் (உதாரணத்துக்குதான்) கொண்டாலும் ஒரு ஐந்து லட்சம் பேர்களாவது இருப்பார்கள் அதிகபட்சமாக இருபது,அல்லது முப்பது லட்சம் பேர்களாவது இருப்பார்கள் ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் (சின்னமேளம்) ஜாதியை கணக்கெடுத்தால் அது தமிழகத்தில் ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என மிகவும் சொற்பமான அளவிலேதான் உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி தன்னுடைய சாதி இப்படி மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறதே அப்படின்னா பின்னால் என்றாவது ஒரு நாள் நம் குடும்ப வரலாறு இந்த உலகத்துக்கு தெரிந்து விடுமே என நினைத்து சின்னமேளம் என்ற தன்னுடைய ஜாதியை இசைவேளாளர் என்ற தமிழ் ஜாதியுடன் இணைத்து விட்டு தன்னை ஒரிஜினல் சுத்த தமிழனாக மாற்றிக் கொண்டார். இசை வேளாளர்கள் என்பவர்கள் தமிழகம் முழுவதும் பெரிய எண்ணிக்கையில் பரவி இருக்கிறார்கள். தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என இசைவேளாளர்கள் என்கிற முகமூடியை அணிந்து கொண்டாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் போது ஒருவேளை இந்த உண்மை வெளிப்பட்டு விடலாம் என அஞ்சியதால்தான் இந்த திராவிட திமுக அரசு ஜாதிவாரி கணக்கை எடுக்க தயங்குகிறது அதையும் மீறி இந்த பாமக ராமதாஸ் மாதிரி ஆட்கள் கேட்டால் மத்திய அரசின் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்கிறது என்பதுதான் உண்மை.


Palanisamy T
நவ 07, 2024 17:56

நாட்டை மதவாதியாக பிளவுப் படுத்தியது யார்? எப்படி இந்த உண்மை உங்களுக்கு தெரியாமல் போயிற்று. இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மைகள் தெரியும். அதற்காக யார் யார்


Malarvizhi
நவ 07, 2024 14:36

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு EWS இட ஒதுக்கீடு தர ஆதரவளிக்காத தமிழக கட்சிகளின் சமூகநீதி முகமூடி மட்டுமல்ல, அவர்களின் சோசியலிச முகமூடியும் உடைந்துள்ளது. இவர்களின் இந்த நிலைப்பாடு எந்த மதத்தை சேர்ந்த ஏழையாக இருந்தாலும் அவர்களை பாதிக்கும்.


புதிய வீடியோ