உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., - த.வெ.க.,வுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு

பா.ம.க., - த.வெ.க.,வுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பா.ம.க., - த.வெ.க., கட்சிகளுக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், நவ., 4 முதல் துவங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு, வரும் நவ., 2ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு, தி.மு.க., கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும், தி.மு.க., தலைமை நிலையச் செயலர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்தை, தி.மு.க., தலைமை நிலையச் செயலர் பூச்சி முருகன் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதேபோல், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா., தலைவர் வாசன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருளை, அமைச்சர் வேலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, தி.மு.க., கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ம.க., ராமதாஸ் தரப்பு முடிவெடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ