உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கி அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுக்காதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வங்கி அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுக்காதீங்க: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்; மற்றவர்கள் கேட்டால் வங்கியில் அக்கவுன்ட் ஓபன் செய்து கொடுப்பது, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை கொடுக்காதீங்க என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம், வேலை தருவதாக மோசடி, குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருகிறோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் தற்போது மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பேராசைப்படும் வாலிபர்கள், விரைவில் சம்பாதிக்க நினைப்பவர்கள் சிக்கி பணத்தை இழக்கின்றனர். பணம் இல்லாதவர்கள் கடன்வாங்கி ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாறுகின்றனர். இதுகுறித்து சிலர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர்.இதுபோன்ற புகார்கள் தினமும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைனில் குவிந்து வருகிறது. நேரிலும் சிலர் புகார் கொடுக்கின்றனர். இம்மோசடிகளில் பெரும்பாலும் வட மாநில வாலிபர்களே ஈடுபடுகின்றனர்.புகார்கள் மீது போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை வெளி மாநிலங்களுக்கு சென்று பிடிக்கின்றனர். இதில் மூளையாக செயல்பட்ட நபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்காக தன் வங்கி கணக்குகள், அலைபேசிகளை பயன்படுத்தாமல் மற்றவர்களுடைய வங்கி கணக்குகள், சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். போலீசார் மோசடி தொடர்பாக முதற்கட்டமாக பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கின் முகவரியை தான் தேடுகின்றனர். அதில் சிக்குபவர்கள் பலர் அப்பாவிகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் வேறு வழியின்றி அவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டியுள்ளது.இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க யாருக்கும் வங்கி கணக்குகள், சிம் கார்டுகள் பெற முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

David Rajan
மார் 26, 2025 18:53

இந்தமாதிரி அறிவுரை சொல்றதுக்கு தகுதியற்ற சைபர் க்ரைம் போலீஸ். எனக்கு யூபிஐ மூலம் பண மோசடி நடந்ததை புகார் அளித்து எந்த துப்பும் செய்யவில்லை எந்த வங்கிக்கு யார் பெயருக்கு போனது என்று எல்லாம் தெரிந்திருந்தும் ஒன்றும் செய்யவில்லை இதுதாண்டா போலீஸ் நம் நண்பன்...


Chandra Sekar
மார் 25, 2025 20:14

சமூக வலைதளங்களை வைத்து மிகப்பெரிய குற்றச் செயல்கள் நடைபெற்றது


அப்பாவி
மார் 25, 2025 08:07

குற்றவாளிகளைப் பிடிக்கத் துப்பில்லை. பிடிச்சாலும் கடுமையா தண்டிக்கத் துப்பில்லை. ஏற்கனவே அவன் மேலே 15, 20 கேஸ் இருக்குன்னு புள்ளி விவரத்தோடு செய்தி மட்டும் போடுவாங்க. பெயில்ல வந்து தொழில் நடத்த அனுமதிப்பாங்க.


Iyer
மார் 25, 2025 07:45

வங்கி கணக்கு துவக்க கீழ்கண்ட ஆவணங்கள் போதுமானதே: 1 ஆதார் கார்டு, 2. கை ரேகை 3. EYE CORNEA 4. LATEST PHOTO


Iyer
மார் 25, 2025 07:45

வங்கி கணக்கு துவக்க கீழ்கண்ட ஆவணங்கள் போது போனதே: 1 ஆதார் கார்டு, 2. கை ரேகை 3. EYE CORNEA 4. LATEST PHOTO


Priyan Vadanad
மார் 25, 2025 07:13

வடநாட்டவர்களை இப்படியெல்லாம் குறை சொல்லலாமா? அவர்கள் பிழைப்புக்கு ஏன் தடை போடவேண்டும்? எல்லோரும் ஹிந்தி படித்துவிட்டால் நமது அறிவு வளர்ந்துவிடும். இவர்களை குறை சொல்லவேண்டிய அவசியமேயில்லை.


N Sasikumar Yadhav
மார் 25, 2025 08:56

வடநாட்டை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காதீர்கள் . இன்னும் இந்த மானங்கெட்ட களவானிங்க ஆட்சி செய்தால் நாமும் வடநாட்டுக்கு பிழைப்பு நடத்த போகனும் இலவசம் வாங்கிக் கொண்டு திராவிட மாடலுக்கு ஓட்டு போட்டால் இந்த நிலைமை விரைவில் தமிழகத்துக்கு வரும்


Appa V
மார் 25, 2025 06:55

ஆதார் அடிப்படையில் வங்கி கணக்குகள் துவக்கலாம்..ஏற்கனவே அக்கவுண்ட் வைத்திருப்பவரின் சிபாரிசு தேவையில்லையே ..இந்த மாதிரி எச்சரிக்கை விடும் போலீசார் மது வாங்கும் இளைஞர்களை எச்சரிக்கலாமே ..அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அல்லாமல் விடிகாலை ஐந்து மணிக்கே இயங்கும் சாட்டிலைட் கடைகளுக்கு அருகிலேயே போலீஸ் பீட் இருப்பது இன்னமும் வெட்கக்கேடான விஷயம் ..பத்திரிக்கை நிருபர்களும் கண்டுகொள்வதில்லை


Kalyanaraman
மார் 25, 2025 07:39

என்ன விவரம் தெரியாமல்... சாராயக்கடைக்கு செக்யூரிட்டி கார்ட் ஆக தமிழக காவல்துறை செயல்படுவது தெரியாதா?


PR Makudeswaran
மார் 25, 2025 10:18

காவல் துறை மது கடைக்கு காவல் எல்லாமே தமிழக அரசு ஒன்றை ஒன்று பகைத்து கொள்ள முடியுமா? நம் முதல்வர் கோபித்து கொள்ள மாட்டாரா


முக்கிய வீடியோ