உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!

சென்னை: ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ், கமென்ட்களை பெறுவதற்கு ஏராளமான ஒரு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது தனது அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன, சின்ன நிகழ்வுகளை கூட வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ரீல்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ரயில் நிலையங்களில் சாகசம் செய்து வீடியோ எடுப்பதை அதிகமானோர் பின்பற்றி வருகின்றன. ஓடும் ரயிலில் படியில் தொங்கி கொண்டு ரிலீஸ் எடுப்பதும், தண்டவாளத்தில் படுத்திருந்து ரீல்ஸ் எடுப்பதும் ரயில் வரும் போது தண்டவாளம் அருகே ஆபத்தை உணராமல் நின்று கொண்டு ரீல்ஸ் எடுப்பதையும் தற்போது இளைஞர்கள் கெத்து என நினைத்து கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கும் போது அஜாக்கிரதையால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அட்ராசிட்டியில் ஈடுபடும் இளைஞர்களை பிடித்து ரயில்வே போலீசார் எச்சரித்தும் அனுப்புகின்றனர். ஆனாலும் இந்த செயல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: விதிகள் படி ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுக்கக்கூடாது. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால் சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ரயில் நிலையங்கள், தண்டவாளயங்கள் ஆகியவற்றில் மொபைல் போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சி.சி.டி.வி., கேமரா மூலம் இதனை கண்காணிப்பார்கள். மீறி ரீல்ஸ் எடுத்தால் எடுத்தால் ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும்.பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் ஈடுப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். மீறி செயல்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் ரயில்வே அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் அடிக்கடி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். அப்பொழுது எச்சரிக்கையை மீறி ரில்ஸ் எடுக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Arul Narayanan
ஜூலை 24, 2025 20:03

ரீல்ஸ் மூலம் எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிசாத்து.


SUBBIAH RAMASAMY
ஜூலை 24, 2025 19:35

அபராதம் மிகவும் குறைவு. குறைந்த பட்சம் இரண்டு நாள் சிறையும் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்படவேண்டும்


Kannan Chandran
ஜூலை 24, 2025 13:00

தமிழ் நாட்டில் அதிகம் ரீல்ஸ் போடுபவர் ...


Diraviam s
ஜூலை 24, 2025 11:36

அதிக பட்ச அபராதம் விதிக்கவும் . அது குறைந்தபட்சம் ரூ 25,000 ஆக இருக்கவேண்டும்.


அப்பாவி
ஜூலை 24, 2025 11:31

பூட்டு போட்டு வெச்சுக்கோங்க. இல்லேன்னா ஐ.ஆர்.சி.டி.சி யை உட்டு படப்பிடிப்புக்கு பணம் வசூலிச்சி காசு பாக்கலாம்.


ديفيد رافائيل
ஜூலை 24, 2025 11:20

இந்த முடிவை எப்போதோ எடுத்திருக்கனும்


Diraviam s
ஜூலை 24, 2025 10:54

Please levy atleast Rs.25,000 as penalty, so that people will have some fear. Now a days Rs.1000/- is nothing for these offenders.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை