உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடை வச்சிருக்கீங்களா? பிப்.,க்குள் விபரம் சொல்லுங்க!

கால்நடை வச்சிருக்கீங்களா? பிப்.,க்குள் விபரம் சொல்லுங்க!

சென்னை:தமிழகத்தில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது; இதுவரை, 45 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் பிப்., வரை நடக்கிறது.ஐந்தாண்டுக்கு ஒருமுறை இப்பணி நடக்கிறது. இதில் தகவல் பதிந்தால், தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள், தட்டுப்பாடின்றி கிடைக்கும்.இதுகுறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கால்நடை வளர்ப்போர் பெயர், முகவரி, ஆதார், மொபைல் போன் எண், முக்கிய தொழில், கல்வித் தகுதி, மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கழுதை, கோழி, வாத்து உள்ளிட்டவைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம், வீடுகளில் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அளவு போன்ற விபரங்களும் பெறப்படுகின்றன.அத்துடன் தெருவில் வசிக்கும் நாய்கள், மாடுகள் எண்ணிக்கை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்காக இடம்பெயர்ந்த கால்நடைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை