மேலும் செய்திகள்
நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?
26-Oct-2025
சென்னை: 'தி.மு.க., பயப்படும் கட்சி அல்ல; மற்றவர்களை பயமுறுத்தும் கட்சி' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: 'தி.மு.க., போல் கட்சி நடத்தவும், வெற்றி பெறவும், அறிவு வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், கட்சி நடத்தவும், வெற்றி பெறவும், மக்கள் மீது அக்கறை வேண்டுமா அல்லது அறிவு வேண்டுமா என, மக்கள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன. இதுபோல, 'தி.மு.க., பயப்படும் கட்சி அல்ல' என, அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால், தி.மு.க., மற்றவர்களை பயமுறுத்தும் கட்சி. முன்னாள் பிரதமர் இந்திரா மீது, மதுரையில் கல் எறிந்து ஆபாசமாகப் பேசி பயமுறுத்திய கட்சி தி.மு.க., அவர் பயப்படாமல், சர்க்காரியா கமிஷன் வாயிலாக நெருக்கடி கொடுத்தபோது, காலிலே விழுந்து கதறியதும் தி.மு.க., தான். அப்போது தி.மு.க., வின் அறிவு எந்த அளவு ஆழ்ந்த அறிவு என தெரியும். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தடுத்து, சட்டசபையில் செருப்பு வீசி, எம்.ஜி.ஆரை தி.மு.க., பயமுறுத்தியது. அதன் விளைவு, ஆட்சியை இழந்து, 13 ஆண்டுகள் முடங்கி, வனவாசம் சென்றது. சட்டசபையில், ஜெயலலிதா சேலையை இழுத்து அவமானப்படுத்தி பயமுறுத்தியது, தி.மு.க., ஆனால், வீரத்திற்கு மறு பெயரான ஜெயலலிதா, பயப்படாமல் திருப்பி அடிக்கவே, 'அய்யோ கொல்றாங்களே' என தி.மு.க., தலைவர் அலறியதை நாடு நன்கு அறியும். சர்க்காரியா கமிஷன், வீராணம் திட்டம், பூச்சி மருந்து ஊழல், 2 ஜி ஊழல் ஆகியவற்றை விஞ்ஞானப்பூர்வமாக தி.மு.க., கையாண்டதை, இன்றைக்கும் மக்கள் மறக்கவில்லை. தி.மு.க.,வின் அறிவு தேவையில்லை என, மக்கள் நினைக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
26-Oct-2025