உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா... 14,086 சிறப்பு பஸ் இயக்க அரசு ஏற்பாடு!

தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா... 14,086 சிறப்பு பஸ் இயக்க அரசு ஏற்பாடு!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அக்.,28 முதல் மூன்று நாட்களுக்கு, சென்னையில் இருந்து தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு, 11,176 பஸ்கள் இயக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்து, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மொத்தம் 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மட்டும் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு, 11,176 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். அக்., 28 முதல் 30ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 3 நாட்களில் 5.83 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியை காரணம் காட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அரசு பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; இதனால் பண்டிகை நேரங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க உள்ளோம். தீபாவளி பண்டிகையின் போது சென்னையிலிருந்து காரில் சொந்த ஊர் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்ட சுற்றுச்சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 21, 2024 21:59

வொவொரு பண்டிகைக்கும் இப்படி சிரமப்பட்டு பயணித்து பண்டிகை கொண்டாடவேண்டுமா? ஒரு சில பண்டிகைகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே கொண்டாடலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை