உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 31ல் டாக்டர்கள் உண்ணாவிரதம்

31ல் டாக்டர்கள் உண்ணாவிரதம்

சென்னை: மருத்துவ துறையில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை கண்டித்து, அரசு டாக்டர்கள் வரும் 31ம் தேதி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து, அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, பெரியார் மருத்துவமனை, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு, புதிதாக பணியிடங்கள் உருவாக்காமல், ஏற்கனவே உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் மாற்றம் செய்து நிரப்பப்பட்டுள்ளன. இதனால், அரசு டாக்டர்களின் பணிச்சுமை அதிகரித்து, மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இவை, அரசு டாக்டர்களுக்கு அறிவிக்கப்படாத, மருத்துவ எமர்ஜென்சியாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, சென்னையில், வரும் 31ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !