உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கவுன்சில் மசோதா டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

மருத்துவ கவுன்சில் மசோதா டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு, 11 உறுப்பினர்களை அரசு நியமிக்கும் மசோதாவுக்கு, டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் பாலாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முறையாக செயல்படவில்லை; தேர்தலை முறையாக நடத்த முயற்சிக்கவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தேர்தல் நிறுத்தப்பட்டு, அரசு அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர்.கவுன்சிலுக்கு, 11 உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுவர் என, சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது; ஒன்பது பேர் மட்டுமே, தேர்தல் வாயிலாக தேர்வு செய்ய முடியும்.அரசின் இம்முடிவால், மருத்துவ கவுன்சில் தன்னிச்சையாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நியமிக்கும் உறுப்பினர்களை விட, மூன்று மடங்கு உறுப்பினர்கள், 1.80 லட்சம் டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்டால் தான், கவுன்சில் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல், அரசு டாக்டர்கள் சங்கத்தினரும், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை