| ADDED : டிச 30, 2025 06:34 AM
சென்னை: ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், 'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.கிருஷ்ணசாமி, சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 88. இதய நோய் பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த கிருஷ்ணசாமிக்கு மனைவி மோகனா, மகள்கள் லதா கிருஷ்ணா, கீதா கிருஷ்ணராஜ், மகன் பரத் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். சிந்து சமவெளி முதல் இந்திரா காந்தி வரை என்ற ஆவணப்படம், இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் ராஜாஜி, காமராஜ், ரவீந்திரநாத் தாகூர், ஜெய ஜெய சங்கரா என, 900க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இவர் தயாரித்துள்ளார். பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.