உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயின் கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா? திருமாவளவன் கேள்வி

விஜயின் கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா? திருமாவளவன் கேள்வி

சென்னை : ''விஜயின் கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா?'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 'பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் தன் கொள்கை எதிரிகள்' என கூறி இருக்கிறார். அ.தி.மு.க.,வை அவர் விமர்சித்தாலும், அ.தி.மு.க., மீது தன் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை. கொள்கை எதிரிகள் பட்டியலில், அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தாதது ஏன்? தமிழகத்தில் தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்ப்பு நிலையில் இருக்கும் அனைத்து கட்சியினரும் ஆளுங்கட்சியை எதிர்ப்பது, இயல்பான ஒன்று. அந்த அடிப்படையிலேயே நடிகர் விஜயும், தன் தி.மு.க., எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பிரச்னை தொடர்பாக, பரந்துார் பகுதி மக்களுக்கு, விஜயின் போராட்டம் நீதியை பெற்று தந்தால், அதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இதை தொடர்ந்து, திருச்சி, விரகலுாரில் ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு விழாவுக்காக சென்ற திருமாவளவன், அங்கு கூறியதாவது:பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் ஒன்று சேருவர் என நம்புகிறேன். ஒரே பா.ம.க.,வாகத் தான் தேர்தலை சந்திப்பர்.'தேர்தலுக்கு பின்னரே, முதல்வரை தேர்ந்தெடுப்போம்' என அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ஜ., சொல்லும் நிலை குறித்து, பழனிசாமி தான் கூற வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், அதை உடைப்பது பா.ஜ., தந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ravikumar V
ஜூலை 06, 2025 09:57

விஜய் தோற்கடிக்க படவேண்டியவர். தவெக தேர்தலுக்கு பிறகு ததோகவாக மாறும்.


Ravikumar V
ஜூலை 06, 2025 09:55

விஜய்யே ஒரு தேவையில்லாத ஆணி. அவருக்கு கொள்கை எதிரி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. தமிழகத்தில் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டியவர் விஜய்.


pv, முத்தூர்
ஜூலை 06, 2025 06:42

விசிகாவுக்கு திமுகாவில் காங்கிரசை விட அதிக சீட் உண்டா? துணைமுதல்வர் பதவியுண்டா?


nagendhiran
ஜூலை 06, 2025 06:31

உன்னோட கட்சியை பற்றி செல்வபெருந்தொகை பேச கூடாது அனால் இவர் மற்ற கட்சிகள் கூட்டணியை பற்றி பேசுவார்? உங்களுக்கு வந்தா"ரத்தம் மற்றவர்களுக்கு வந்தா மட்டும் தக்காளி தொக்கா என்ன?


RAMESH
ஜூலை 06, 2025 05:46

எலும்.....பு துண்டுக்கு ஆசை பட்டு அடிமை வாழ்வு வாழும் ஈத்..தரை பயல்கள்...... உனக்கு அரு...கதை கிடையாது இந்த கேள்வி கேட்க


sasikumaren
ஜூலை 06, 2025 05:23

ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்தும் குருமாவுக்கு மற்ற கட்சிகள் மீது என்ன கேடான ஆர்வம்


V K
ஜூலை 06, 2025 05:12

திமுக கூட்டணியில் உனக்கு பிளாஸ்டிக் நாற்காலி உண்டா


Mani . V
ஜூலை 06, 2025 04:51

இவன் திமுகவுடன் வாங்கும் காசுக்கு மேல கூவி நம்மை சாகடிக்கிறான். முதலில் இவனிடம் ஏதாவது கொள்கை உண்டா? தன் ஜாதி மக்களை முன்னுறுத்தி கட்சியை பிறரிடத்தில் அடகு வைத்து இவன் மட்டுமே வசதியாக வாழ்கிறான்.


சிட்டுக்குருவி
ஜூலை 06, 2025 02:29

சேராத இடம்சேர்ந்து கொள்கையை இழந்தாயப்பா திருமா வஞ்சனை செய்தாயப்பா திருமா ,வஞ்சித்து பொய்தாயப்பா முன்னேற்றம் காட்டுவாய் என்று நம்பினவரை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டாயப்பா திருமா நாங்கள் வாழ்வது எப்போதப்பா ?