உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயப்படாதீங்க மக்களே... படகு வாங்கியாச்சு...! சென்னை மக்களின் மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?

பயப்படாதீங்க மக்களே... படகு வாங்கியாச்சு...! சென்னை மக்களின் மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்பை விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு வாங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் படகுகள் மண்டலம் வாரியம் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் மண்டலம் 3க்கு ஒரு படகும், மண்டலம் 14க்கு இரு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள், இதனை பார்த்து சிரிப்பதா..? அழுவதா..? என்று தெரியவில்லை என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Sivagiri
அக் 03, 2024 22:27

அந்த 4000 கோடியில் , மிச்சம் இருக்குற காசுக்கு , வாங்கியாச்சு


ஆரூர் ரங்
அக் 03, 2024 21:49

கட்டுமரம் போதுமே. (அவர் காட்டிய வழியில்)


S.Martin Manoj
அக் 03, 2024 18:44

கடந்த 30 வருட குஜராத் ஆட்சியின் லட்சணம் கடந்த வார மழையில் குஜராத் மாநிலம் வெள்ளத்தில் மிதந்த பொழுது தெரியவில்லையா? திராவிட ஆட்சியை குறை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?


D.Ambujavalli
அக் 03, 2024 18:31

ஆகக்கூடி, கமிஷன் வரவுக்கு இன்னொரு வழி கிடைத்துவிட்டது.அடுத்த மழையில் இந்த படகுகளை பழுது பார்க்க செலவு, இது ஒவ்வொரு மழைக்கும் reccurring வர வுக்கு உபாயங்கள் என்ன ஒரு புத்திசாலித்தனம் இந்த திராவிட மாடலை அடித்துக்கொள்ள உலகிலேயே யாருமேயில்லை


நிதிபதி
அக் 03, 2024 18:02

நாங்க செய்த சாக்கடை ரிப்பேர் மீது எங்களுக்கே நம்பிக்கையில்லை. தவிர, விளையாட்டுத்துறை அமிச்சர் மழைக்கால விளையாட்டாக படகுப் போட்டியும் நடத்த முடிவு செஞ்சுட்டாரு. விரைவில் அறிவிப்பு வரும்.


Lion Drsekar
அக் 03, 2024 15:11

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உலக நன்மைக்காகவும் ஒரு விழிப்புணர்வுக்காகவுமே பதிவு செய்கிறேன், உலக அதிசயம் நான் பதிவு செய்த கருத்துக்கள் அப்படியே வெளியானதால் இறுகிய மனத்தோடு பல ஆண்டுகளாக தினமலரொடு வாழ்ந்து வந்த நான் ஒட்டுமொத்தமாக மறக்கவேண்டிய ஒரு நிலைக்கு சென்ற நிலையில் ஹிரண்யாய மற்றும் பயனுள்ள கருத்துக்களை அதிவு செய்ததால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன், மீண்டும் தொடர்கிறேன், எனது கருத்துக்களை பிரசுரித்த தினமலருக்கு நன்றி, ஒரே ஒரு வேண்டுகோள், நான் மூன்று தலைமுறையினர்களைக் கண்டுவிட்டேன் எந்த துறையாக இருந்தாலும் ஆழமாக கருத்துக்களை அறிந்து , தெளிவு பிறக்க செய்ய வேண்டியே கருத்துப்பதிவுகளை செய்கிறேன், எதிர்க்கட்சிகள் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது, நடவடிக்கை எடுக்கவேண்டிய எல்லா துறைகளும் கைகட்டி வாய்பொத்தி நிர்க்கரியாது, எனது கருத்துப்பதிவுக்கு பழி வாங்க நள்ளிரவில் மிகப்பெரிய காரில்வந்து எனது வீட்டின் கேட்டை இடித்து மிகப்பெரிய சேதத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள், எதற்க்காக நேரில் சென்று புகார் அளிக்கவேண்டும் என்று ஆன்லைனில் புகார் பதிவு செய்தேன், அவர்களும் ஆன்லைனில் கொடுத்த புகாருக்கு பதில் அளித்து முடித்து விட்டார்கள், எதற்க்காக இந்த அதிவு என்றால் இன்று மக்களுக்காக யாருமே எந்த ஒரு குறையுமே இல்லை, நீதிமன்றமும் பல நல்லது செய்தாலும் , ஒரு இலர் என்னைப்போன்ற அரைவேக்காடுகள் கொடுக்கும் புகாருக்கு கண்டித்து தண்டனையும் விதிப்பதால் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டம், படகு மேட்டருக்கு வருவோம், கொளுத்தும் கொடையாகட்டும் இன்றுவரை எங்காவது சாக்கடை நீர் குழாய்களில் நீர் நீங்காமல் இருக்கிறதா . அன்றுமுதல் இன்றுவரை பொதுமல்லள் சாக்கடை கழிவு நீர் சாரலில் நடந்தும் வானங்களிலும் சென்று வருகிறார்கள் .அப்படி இருக்க உண்மைநிலை என்ன என்றால் அரசாங்கமே குளங்களையும் , குடிநீர் ஆதாரங்களையும் ஆக்கரைமீது தங்கள் பெயர் உலகுக்கு தெரியவேண்டும் ன்பதற்க்காக கோட்டங்கள் என்ற யாருமே பயன்படுத்தமுடியாத அளவுக்கு பாழடைந்த அரண்மனைகளைக் கட்டி, அதை புனரமைப்புக்காக செலவும் செய்துகொண்டு , மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் செய்துவருவதால்தான் இன்றைக்கு படகு வாங்கவேண்டிய ஒரு நிலை, என் வீட்டின் கேட்டை உடைத்த சமூக விரிந்தோர்கள் அதிகமாக என்னை கொலை செய்வார்கள் பரவவேயில்லை,k மக்கள் பிரநிதிகளுக்கு பல லட்சம் கோடியில் கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக மக்கள் வாழ குடிநீர் அதரங்களை சென்னை போன்ற இடங்களில் கட்டினால் குடிநீர் பிரச்னையும் இருக்காது மழைநீரையுயம் சேமிக்கலாம் , ஹிரண்யாய நமஹ


Ramaswamy Jayaraman
அக் 03, 2024 14:50

எதனை படகுகள் வாங்கினார்கள். எவ்வளவு செலவு என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது


கத்தரிக்காய் வியாபாரி
அக் 03, 2024 14:07

அப்படியே ஒரு பெரிய கொடை, சென்னை முழுக்க நனையாதமாதிரி வாங்கிட்டீங்கன்னா ரொம்ப நல்ல இருக்கும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 03, 2024 14:04

அடுத்து படகு ஓட்ட படகோட்டிகளை பணியமர்த்த வேண்டும். வாங்கிய படகை உபயோகப் படுத்தி இலட்சம் மக்களை காப்பாற்றி விட்டோம் என்று தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளிவர மழை பெய்யும் போது வெள்ள நீர் வடியாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மந்திரிக்கும் ஒரு இடம் ஒதுக்கி படகில் சென்று மக்களை காப்பாற்றும் விதமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி கேமரா மேன்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்து சேர்த்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். துணை முதலமைச்சர் அவர்களுக்கு இதில் ஆழமில்லாத இடமாக பார்த்து இடம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாநகராட்சி மேயர் அவர்களை ஏதாவது ஒரு அமைச்சருடன் வாங்கிய படகில் சென்று வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும். உடனடியாக வெள்ள நிவாரணமாக 50000 கோடி மத்திய அரசு தர வேண்டும் என்று இப்போதே வெள்ள நிவாரண அறிக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். நமது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எங்கு சென்றாலும் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று மத்திய அரசினை சுற்றி பேசிச் சொல்ல வேண்டும். அதனை அனைத்து தொலைகாட்சிகளும் இடைவிடாது ஒளிபரப்ப வேண்டும். திமுக ஜோடி விங்க் இப்போதிருந்தே மீம்ஸ் தயார் படுத்த சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போடத்தான் படகு வாங்குதல். வாழ்க தமிழகம். வளர்க மக்கள். முக்கிய குறிப்பு. யாரும் வெள்ளம் வராமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை செய்தும்? என்ற கேள்வியை எப்பொழுதும் எங்கேயும் எந்நேரமும் கேட்க கூடாது.


Kumar Kumzi
அக் 03, 2024 12:49

ஓங்கோல் தெலுங்கர் விடியல்கார்ர்ரூ எல்லாருக்கும் நீச்சல் பயிற்சி கொடுத்திருந்தால் படகு வாங்குற செலவு மிச்சமிரும்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை