உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தக்காளி, கத்தரிக்காய் பீன்ஸ் வாங்கலையோ!

தக்காளி, கத்தரிக்காய் பீன்ஸ் வாங்கலையோ!

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சிறுவர், சிறுமிகள் காய்கறி சந்தை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கலைக்கூடம் அமைப்பு சார்பில், ஏற்படுத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மினி காய்கறி சந்தையில், 10 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்று காய்கறிகளை கூவிக் கூவி விற்பனை செய்தனர். இதில் காரட், பீன்ஸ், கத்தரி, உருளைக்கிழங்கு, கொத்தவரங்காய், கீரைகள் என, ஏராளமான காய்கறிகள் இடம் பெற்றன.நடைப்பயிற்சி சென்றவர்கள், குழந்தைகள் நடத்திய காய்கறி சந்தையில் உற்சாகமாக விலைபேசி, காய்கறி வாங்கிச் சென்றனர். கலைக்கூடம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிதா மற்றும் ஜெனிதா கூறுகையில், 'காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகளின் சிரமங்களை, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த விழிப்புணர்வு காய்கறி சந்தையை ஏற்பாடு செய்து இருக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

srinivasan varadharajan
ஜூலை 20, 2025 13:41

சிறு வயதில் தலையில் தோட்டத்தில் விளைந்த காய் கூடையும் அதற்குள் பெரிய தராசும், கால் கிலோ, அரை கிலோ படியும் வைத்து சாயங்காலம் ஊருக்குள் அனுப்புவார்கள்.. அப்போ எல்லாம் கால் ரூபாய், அரை ரூபாய் வியாபாரம்.எடையும், காயும் வைத்து தராசு பிடிக்க தெரியாது. கூடையை இறக்கி வைப்பர்கள். கையில் வருவதை அள்ளி கொடுப்பேன். அவர்களாகவும் எடுத்து கொள்வார்கள். ஊரெல்லாம் சாதி வித்தியாமின்றி எல்லோரும் பெரியம்மாக்கள், சின்னம்மாக்கள், அத்தைகள், அக்காக்கள், வீடு வரும்போது 10, 20 பைசா அபூர்வமாக ஒரு கால் ரூபா என அதிகம் போனால் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் தேறும். பெரிய வியாபாரம் பண்ண திருப்தி இருக்கும். தராசு பிடிக்க தெரியாது என்ற உண்மை வீட்டுக்கு தெரியாது.


சமீபத்திய செய்தி