உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச்க்கு வெளியே போகக்கூடாது: ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

லஞ்ச்க்கு வெளியே போகக்கூடாது: ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

சென்னை: சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்மிக உரை நிகழ்த்திய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை விமர்சித்ததாக, போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், மாணவர்களிடம் நேரடியாக பேச அனுமதிக்கக்கூடாது* முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், கல்வி சாரா நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது* தேசிய சுகாதார இயக்கக மருத்துவ குழுவினரை தவிர, மற்ற குழுவினரை மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கூடாது* முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது* அரசு ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்டோரை தவிர, மற்றவர்களை பாடங்கள் நடத்த அனுமதித்தால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்* மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ, இரட்டை அர்த்தத்திலோ, தொலைபேசியிலோ பேசக்கூடாது. மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும்* விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை. முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி மட்டுமே, அரசு நிகழ்ச்சியை அனுமதிக்கலாம்.இவ்வாறு, தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kulandai kannan
செப் 09, 2024 14:55

பைபிள் விநியோகிக்க தடையேதும் இல்லையே


Ramesh
செப் 09, 2024 11:58

இதுக்கு யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் ஆல் பாஸ் என்று அறிவித்துவிடலாம்


Sivagiri
செப் 09, 2024 11:26

பேட் பாய்ஸ் புல்லிங்கோ , சொல்றதைத்தான் ஆசிரியர்கள் கேக்கணும் . . ரௌடிகள் கேங் சொல்றதைத்தான் போலீஸ் கேக்கணும் , கோர்ட்டும் கேக்கணும் , மெடிக்கல் கம்பெனிகள் சொல்றதைத்தான் டாக்டர்கள் கேக்கணும் , கட்சி , கூலிப்படை , சொல்றதுதான் அதிகாரிகள் கேட்க்கணும் , இதான் ipp ரூல்ஸ்


Apposthalan samlin
செப் 09, 2024 11:22

சூப்பர் இதை முன்னரே செய்து இருந்தால் விஷ்ணு நுழைந்து இருக்க முடியாது . தமிழ் நாடு அரசு எல்லாம் லேட்டா தான் முடிவு எடுக்கும் .


Ravi chandran Chandru
செப் 09, 2024 12:41

ஓகே மிஸ்டர்


vbs manian
செப் 09, 2024 10:23

நிகழ்ச்சிக்கு அனுமதி யார் கொடுத்தார். ஆசிரியர்கள் பலிகடா .


vbs manian
செப் 09, 2024 10:18

இதை விட பயங்கரமான வெறுப்பு பேச்சுக்கள் மீடியாவில் வெளி வருகின்றன. பள்ளிகளில் கஞ்சா தாண்டவம் அரங்கேறுகிறது. ஆசிரியர் தாக்கப்படுகிறார். கஞ்சா விற்பனையில் மாணவர். இதற்கெல்லாம் ஏன் யாரும் கொதித்து எழவில்லை.


visu
செப் 09, 2024 09:22

ஹாஹா அரசு பள்ளிகள் நடத்த நிதி உதவி செய்யுமாறு முன்னாள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார்கள் இந்த லட்சணத்தில் யாரும் வர வேண்டாம் என்றால் அவங்களுக்கு பாராட்டு விழா கூட நடத்த மாட்டாங்களா கேட்டால் பல வேலைகளுக்கு நிதி பற்றாக்குறை என்கிறார்கள்


NATARAJAN R
செப் 09, 2024 08:48

ஆசிரியர்கள், உணவு உண்ண மதியம் வெளியே செல்ல தடை. அற்புதம். அப்படி என்றால் அரசே பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தினம் மதியம் உணவு வழங்க வேண்டும். நீதிமன்றம் இந்த உத்தரவை ஏற்காது. உண்ட இடைவேளை நேரத்தில், வெளியே போவது ஆசிரியர் உரிமை. ஆனால் எது நடந்தாலும், எந்த உத்தரவு பிறப்பிக்கும் போதும், அடிமை என நினைத்து பணி செய்வது ஆசிரியர்களின் அபத்த செயல்.


M S RAGHUNATHAN
செப் 09, 2024 09:49

முதலில் அரசு அலுவலகங்களில் Canteen நடத்துவதை தடை செய்யவும். தேநீர் இடைவேளை தடை செய்யப் படவேண்டும். .வேண்டுமானால் ஊழியர்கள் வீட்டில் இருந்து தேநீர் அல்லது காபி எடுத்து வர வேண்டும்.


M S RAGHUNATHAN
செப் 09, 2024 09:50

மதிய உணவு இடைவேளை 30 நிமிடத்திற்கு மேல் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது.


T.sthivinayagam
செப் 09, 2024 08:28

எல்லாம் முற்பிறவியாக இருக்கலாமோ , ஆமாம் கருத்து சொல்பவரகள் முற்பிறுவி அரசியல் தலைவர்கள் முற்பிறவி பற்றி எல்லாம் சொல்வாங்களா


sundarsvpr
செப் 09, 2024 08:13

கல்வி அமைச்சர் பேசிய பேச்சை எவரும் கண்டிக்கவில்லை. இதைவிட தரைகுறைவாய் யார் பேசமுடியும்.? விஷ்ணு மீது அரசு கல்வித்துறை வழக்கு தொடங்குமா தொடங்கினால் நீதிமன்றம் அமைச்சர் பேசிய பேச்சு அதிகார துஷ்ப்பிரயோகம் அல்லது மமதை என்ற கோணத்தில் ஆராயவேண்டும். நாவை அடக்கி பேசவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான வாசகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை