உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவை சீண்டாதீங்க என தி.மு.க., வினருக்கு ஸ்டாலின்... வாய்ப்பூட்டு!: கூட்டணியை தக்கவைக்க பேசசு நடத்தும் படி அறிவுறுத்தல்

திருமாவை சீண்டாதீங்க என தி.மு.க., வினருக்கு ஸ்டாலின்... வாய்ப்பூட்டு!: கூட்டணியை தக்கவைக்க பேசசு நடத்தும் படி அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் வகையில் மது ஒழிப்பு மாநாடு அறிவித்து, அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்ததுடன், அடுத்த கட்டமாக, 'ஆட்சியில் பங்கு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசி வருவது, தி.மு.க.,வினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இருப்பினும், 'திருமாவளவனுக்கு எதிராக பேசி, அவரை சீண்டி விட வேண்டாம்' என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட்டுள்ளார்; அத்துடன், 'கூட்டணியை தக்கவைக்க திருமாவுடன் பேச்சு நடத்துங்கள்' என்றும் அறிவுறுத்தியுள்ளார். காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k7dzq8m0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மாநாடு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வும் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். இது, தி.மு.க.,வினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும், தங்களின் கோபத்தை அவர்கள் வெளிக்காட்டவில்லை. முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றிருந்ததே அதற்கு காரணம்.

சமாளித்தார்

முதல்வர் தன் அமெரிக்க பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம், 'மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க., பங்கேற்கலாம்' என, திருமாவளவன் அழைப்பு விடுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், 'திருமாவளவன் இதுபற்றி விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அதற்கு மேல் விளக்கம் தேவையில்லை' என்று சமாளித்தார். இந்நிலையில், ஆட்சியில் பங்கு பற்றி, சமீபத்தில் திருமாவளவன் பேசியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த திருமா, 'ஆட்சியில் பங்கு என்பதை நீண்ட காலமாகவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதையே இப்போதும் சொல்கிறோம்' என்றார். இந்தச் சூழலில், முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சந்தித்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், 'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போக்கு, சமீப காலமாக தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் எதிராக உள்ளது.'ஆட்சியில் பங்கு என திருமாவளவன் தற்போது பேசுவதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் துாண்டுதல் மற்றும் காய் நகர்த்தல்களே காரணம்' என்று புகார் கூறியுள்ளனர். அவர்கள் கூறியவற்றை எல்லாம், கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், 'தற்போது திருமாவளவனை சீண்ட வேண்டாம்; அமைதியாக இருங்கள்; கூட்டணியில் குழப்பம் வராமல், அவரை அழைத்து பேசுங்கள்' என, வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.

சிதைக்க முயன்றார்

இந்த விவகாரத்தில், முதல்வரிடம் தி.மு.க., மூத்த தலைவர்கள் கூறியது பற்றி, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: லோக்சபா தேர்தலின் போதே, தி.மு.க., கூட்டணியை சிதைக்க பழனிசாமி முயன்றார்; ஆனால், முடியவில்லை. தமிழக சட்டசபைக்கு ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் தி.மு.க., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்.முதற்கட்டமாக திருமாவளவனை கையில் எடுத்திருக்கிறார். அவரும், பொதுநலன் தொடர்பான விஷயத்திற்காக போராடுவது போல, மது ஒழிப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், அது, தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, இந்த காரியத்தில் திருமா இறங்கி உள்ளார். மது ஒழிப்புக்கு எதிராக, தற்போது தி.மு.க.,வால் பேசவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது. அப்படியொரு இக்கட்டை தி.மு.க.,வுக்கு ஏற்படுத்துவது தான், திருமாவளவன் மற்றும் பழனிசாமியின் திட்டம். இதுபோன்ற நிகழ்வுகள், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் நிகழ்ந்தன. கூட்டணியில் இருந்தவர்கள், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான, சில காரியங்களை செய்தனர். குறிப்பாக, தே.மு.தி.க.,வின் விஜயகாந்த், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக சட்டசபையில் பேசினார். உடனே, சபையிலேயே அதற்கு ஜெ., பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி, 'தே.மு.தி.க.,வை உடைத்து, விஜயகாந்துக்கு பலமாக இருப்போரை, அ.தி.மு.க., பக்கம் கொண்டு வாருங்கள்' என, கட்சியினருக்கும் உத்தரவிட்டார்.

அதிரடி நிலைப்பாடு

அதன் பிறகு தான், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.சுந்தர்ராஜன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டனர். அப்படியொரு அணுகுமுறையை, வி.சி.,க்கள் விஷயத்தில், தி.மு.க.,வும் பின்பற்ற வேண்டும். வி.சி., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரை தி.மு.க., பக்கம் இழுக்க வேண்டும். அதன் வாயிலாக, திருமாவை மடக்கி விடலாம். அவர் அமைதியாகி விடுவார் என்று, முதல்வரை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூறினர். அவர்கள் சொல்லியதை பொறுமையாக கேட்ட ஸ்டாலின், 'நீங்கள் சொல்வது தற்போதைய சூழ்நிலைக்கும், தி.மு.க.,வுக்கு சரிவராது; அது ஏற்புடையதும் அல்ல. வி.சி., கட்சி நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் வாயிலாக, திருமாவை அழைத்து வாருங்கள். அவரிடம் பேசிக் கொள்ளலாம்' என்று, பதில் அளித்துள்ளார்.

வலுவிழக்கச் செய்யும் திட்டம்

'தி.மு.க., கூட்டணியை வலுவிழக்கச் செய்ய எதிர்க்கட்சியினர் திட்டமிடுகின்றனர். திருமாவுக்கு எதிராக சர்ச்சையாக பேசி, அவர்கள் விரித்திருக்கும் வலையில், தி.மு.க.,வினர் சிக்கி கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தை கவனமாக அணுக வேண்டும்' என்று கூறி, வாய்ப்பூட்டும் போட்டுள்ளார் ஸ்டாலின். இதன் பிறகே, அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் அமைதியாகினர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

'நாங்கள் யாரையும் மிரட்டவில்லை'

திருச்சி விமான நிலையத்தில் நேற்று திருமாவளவன் அளித்த பேட்டி: வி.சி.,க்கள் நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாடு, சமூக பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கும் மாநாடு; தேர்தல் அரசியலுக்கானது அல்ல. கள்ளக்குறிச்சியிலும், மரக்காணத்திலும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை சந்தித்த போது, அவர்கள் கண்ணீர் மல்க முன்வைத்த ஒருமித்த கோரிக்கை, 'டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என்பது தான்.அதற்காக மாநாடு நடத்தினால் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று பிரச்னையை திசை திருப்புகின்றனர். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, வி.சி., கட்சி தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து, கொள்கை முழக்கமாக இருந்து வருகிறது. இந்த முழக்கத்தில் மாற்றம் இல்லை. மது ஒழிப்பு மாநாடு வாயிலாக யாரையும் மிரட்டவில்லை. மத்தியில், 1977 முதல் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அதுபோல, மாநிலத்திலும் கோரிக்கை விடுப்பதில் தவறில்லை. அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். கூட்டணி ஆட்சி வந்தால் மட்டுமே, எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankar
செப் 16, 2024 17:27

படுத்தே விட்டான் ஐயா - மூமென்ட்


என்றும் இந்தியன்
செப் 16, 2024 16:24

இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். இது தான் ஸ்டாலின் முஹம்மதுவுக்கும் ஜனாதிபதிக்கும் வித்தியாசம். குரானில் என்ன சொல்லியிருக்கின்றது கூட தெரியாத ஒருவன் பேசினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கின்றது ஸ்டாலின் பே ஏசியது. இந்தியா பூராவும் பல உலகநாடுகளில் -லண்டன், பெர்லின், உகாண்டா, தாய்லாந்து, ஸ்பெயினில் விநாயக சதுர்த்தி கொண்டாடினார்கள்- அந்த விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதாம் ஆனால் நபிகள் பிறந்த நாளுக்கு வாழ்த்து ஒல்லுமாம் இந்த ஸ்டாலின் முஹம்மது. உண்மையான முஸ்லீம் இவர் தான்.


ஆரூர் ரங்
செப் 16, 2024 14:19

திமுக அரசில் நிதி, உள்துறை பொதுப்பணி, வருவாய், மதுவிலக்கு, போன்ற துறைகளை எக்காலத்திலும் பட்டியலின எம்எல்ஏ க்களுக்கு தரமாட்டார்கள். அம்பேத்கர், ஈவேரா பெயர்களை வைத்து அரசியல் செய்வார்களே தவிர SC க்களுக்கு முதல்வர் பதவியை தரவே மாட்டார்கள். கடைசி வரை 200 உ.பி, பசைவாளிகள் மட்டுமே நிச்சயம். . அப்படித் தந்தால் கருத்துப்பதிவு செய்வதையே நிறுத்தத்தயார்.


Rengaraj
செப் 16, 2024 13:50

திருமாவின் தொண்டர்கள், அவரை நம்பி வாக்களித்தவர்கள் இனிமேல் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். கட்சி இதுநாள் வரை பெற்ற வாக்குகள் அனைத்தும் சொந்த வாக்குகள் இல்லை.கூட்டணிகட்சிக்காரர்களின் ஓட்டும் கணிசமாக உள்ளது. இதை தொண்டர்கள் உணரவேண்டும். சீமான் போன்று தனியாக களம் கண்டால் உண்மையான வாக்குசதவீதம் தெரியும். தமிழகத்தில் தி.மு.க வே தனியாக போட்டியிட்டால் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் , அவர்களுடைய உண்மையான வாக்குசதவீதம் எவ்வளவு என்பது தெரியாது. வி.சி க , சமீபகாலமாக கூட்டணி தயவில் எம்.பி , எம்.எல்.ஏ என்று பெற்றுக்கொண்டுவிட்டு , உண்மையான கணக்கு தெரியாமல், கூட்டணி வோட்டுகளையும் சேர்த்து தனக்கு இத்தனை சதவீதம் ஆதரவு இருக்கிறது என்று தேர்தல் கமிஷனில் அறிக்கைகொடுத்து கட்சியின் மாநில அந்தஸ்தையும் பெற்றுவிட்டார்கள்.இப்போது ஆட்சியில் பங்குபெற முடிவு செய்துவிட்டார்கள். மேம்போக்காக தி.மு.க வி.சி.க மேல் நட்பு கொண்டுள்ளது என்று சொல்லிக்கொண்டாலும் கீழ்மட்டத்தில் அதாவது இரு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மட்டத்தில் இனிமேல் ஒற்றுமை இருக்காது . விரிசல் ஏற்பட்டுவிட்டது. இதை வரும்காலங்களில் இவர்களிடையே நடக்கும் வார்த்தை போர்களில் காணலாம். அல்லது அந்தந்த தொகுதி நிலவரங்களில் காணலாம்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 16, 2024 12:38

வேற போக்கிடம் இல்ல ...... தொடர்ந்து நன்றியோடு அறிவாலயத்துக்கு கொத்தடிமையாக இருப்பதே பாதுகாப்பு ன்னு புரிஞ்சிருக்கும் ..... வேறு எங்கு போனாலும் ......


SRISIBI A
செப் 16, 2024 12:29

சபாஷ் விசிகே கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது ஆனால் தலைமை என நினைக்கும் நபர் சொல்வதை யாரும் கேக்க மாட்டார்கள்


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 08:53

சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத்தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு ......... ஏனென்றால் திமுக சுயபலத்தில் அதிக வாக்கு சதவிகிதம் பெறுவது கடினம் ...... கூட்டணி பலத்தால்தான் அன்றும், இன்றும் நிற்கிறது .......


N.Purushothaman
செப் 16, 2024 07:35

குருமாவை எல்லாம் நம்பி ஆட்சி நடத்துற அளவுக்கு சமூக நீதி காத்தான் நிலைமை மோசமாகிடுச்சே ....பையனுக்கு பட்டாபிஷேகம் பண்றதுக்கு முன்னாலேயே ஆட்சி பணாலாயிடும் போல ...


Palanisamy Sekar
செப் 16, 2024 06:58

நீ இல்லைன்னா என்ன..எனக்கு அவரு இருக்காரு.. என்கிற பாணியில் அரசியல் பேரம் பேச ஆரம்பித்துவிட்டார் திருமா. சென்ற முறை இப்படி சொல்லித்தான் திருமாவை நம்ம்ம்பி ஏமாந்து பாஜக கூட்டணியை கழற்றிவிட்டு ஏமாந்து விழிபிதுங்கி நின்றார் எடப்பாடி பழனிச்சாமி. இப்போ சூடுபட்ட பூனையை போல பழனிச்சாமி கொஞ்சமா உஷார் ஆகிட்டார். ஆபீஸ் வந்து அழைத்தால் போகலாம் என்று சொல்ல சொல்லிவிட்டார். அதனால் திருமாவுக்கு என்ன செய்வது என்றே புரியாமல் ஆட்சியில் பங்கு என்கிற காணொளியை உடனே நீக்கிவிட்டார். அதனை கேட்ட நிருபர்களிடம் பதில் சொல்லாமல் கனிமொழி ஓடுவதை போல ஓடுவதை காணும்போது, திருமாவுக்கு தில் போதாது என்றே தோன்றுகின்றது. திமுகவை விட்டு வெளியே போனால் இதுபோன்று திமுக வழங்கும் நிதி அளவுக்கு தனக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டதால் தோழமை சூட்டுதல் என்கிற வார்த்தையை போல வேறு சொல்லி ஸ்டாலினோடு கட்டியணைத்து நிற்கும் போட்டோவை வெளியிட்டு பிரச்சினையே இல்லாமல் பேசிவிட்டு வந்துவிடுவார். கூடுதல் செலவு திமுகவுக்கு, கிடைத்த சந்தோஷத்தில் திருமா சொல்வார் திமுகவுடனான கூட்டணி ஒரு குடும்பத்தை போல என்று சொல்லிவிட்டு போவார். ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் போயிடும் என்கிற குலைநடுக்கத்தில் கூட்டணியை விட்டு திருமா போகாத அளவுக்கு படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொல்லி சமாளிப்பார். தேர்தல் வாக்குறுதி போல அதுவும் பெப்பே காட்டிவிடும். புரிந்த அரசியல்வாதிகள் உதட்டோர சிரிப்போடு கடந்து போவார்கள். திருமாவுக்கு அசுரர் பலம் இருப்பது போல ஏமாந்து நிற்கும் கட்சிகளை பார்க்கும்போது சிரிப்புதான் வருகின்றது. கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து பாணியில் திருமாவின் அரசியல் தொடரும்


Ms Mahadevan Mahadevan
செப் 16, 2024 06:12

ஜாதி கட்சிகளை வளர்த்து விட்டதன் பலன் .அனுபவிக்க வேண்டியதுதான். திருமா போன்றவர்களால்தான் ஜாதி இணும் தமிழ் நாட்டில் ஒழிய வில்லை.சுயநல வாதி.


முக்கிய வீடியோ