உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம், '' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வெறுப்புணர்வு

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமான போராட்டத்துக்கு பிறகு தான் கல்வி கதவு திறக்கப்பட்டது.இன்றும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளனர். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வர், புதுமைப்பெண், காலை உணவுத்திட்டம் என பல்வே றுதிட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசு துணைபோகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இது நிரந்தரம் அல்ல. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் ரொம்ப நாள் நீடிக்காது. சாதிமத பிரிவினை பார்க்காமல் எல்லாரையும் சமமாக மதிக்கும் பண்பை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

முன்னேற வேண்டும்

தமிழகம் சமத்துவ பூங்காவாக, சகோதரத்துவத்தோடு திகழ மாணவர்கள் அந்த எண்ணத்தோடு வளர்ந்தால் தான் முடியும். இதனால் பள்ளி நிகழ்ச்சிகளிலும் அரசியலிலும் அட்வைசும் பேச வேண்டி உள்ளது. சமூக படிப்பில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்பு கிடைப்பது இல்லை. கிடைப்பவர்கள். வாய்ப்பு கிடைப்பவர்கள் அதனால் கிடைக்கும் திறமையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.இன்றைக்கு பள்ளியில் படிக்கும் நீங்கள் பட்டப்படிப்பு ஆராய்ச்சி படிப்பு படித்து முன்னேற வேண்டும்.

நம்பாதீர்கள்

அறிவியல் வளர்ந்துள்ளது. அறிவை பெற தேவையான பல வாய்ப்புகள் உள்ளது. செயற்கை நுண்ணறிவு புரட்சியை உண்டாக்கி உள்ளது. எல்லாத்துக்கும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது நாம் எதற்கு படிக்க வேண்டும் என நினைத்து விடாதீர்கள். எந்த கண்டுபிடிப்பையும் உங்கள் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்த வேண்டுமே தவிர உங்கள் சிந்தனையை சிதைக்க அனுமதிக்கக்கூடாது. உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம்.

கெத்து

' Likes', 'Views' கெத்து இல்லை. ' Marks' ' degerees' தான் கெத்து. படிப்பதோடு நன்றாக விளையாடுங்கள். உடல்நிலையை பார்த்து கொள்ள வேண்டும். எப்படி 'Upgrade' ஆக வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் என பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள். மனது விட்டு பேசுங்கள். எந்த பிரச்னை என்றாலும் பயப்படாமல் நம்மிடம் ஷேர் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்க வேண்டும். சிறந்த நண்பர்கள் யார் என கேட்டால் அப்பா அம்மா என சொல்ல வேண்டும். அப்படி பழகுங்கள். கல்வி, நண்பர்கள், சூழல் இதுதான் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Raj S
ஆக 22, 2025 22:41

அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நமக்கு தகுதி இருக்கான்னு சுய பரிசோதனை செஞ்சு பாக்குற அளவுக்கு மூளை இல்லாதவங்க, யாரவது எழுதி குடுக்கறதை படிச்சா இப்படி தான் இருக்கும்...


Modisha
ஆக 22, 2025 22:27

சினிமாவில் தேடணுமா


Karthikeyan Palanisamy
ஆக 22, 2025 22:19

திராவிட மாடலில் தேடுங்கள்


theruvasagan
ஆக 22, 2025 22:17

ஒழுங்கா படிச்சவர் டாக்டர் ஆனார். ஒழுங்கா படிக்காதவர் பெரிய மந்திரியாக ஆனார் என்பதுதான் தமிழ்நாட்டு கல்வியின் பெருமை. ஆகையால் மாணவச் செல்வங்கள் அந்த ரகசியத்தை சொன்ன அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டால் பெரிய இடத்துக்கு உயரலாம் என்பது எனது பணிவான கருத்து.


Ambedkumar
ஆக 22, 2025 21:08

ASER தரவுகளின்படி, தமிழ்நாட்டில் முதன்மைக்கல்வியின் தரம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் மோசம். உயர் கல்வியை கொன்றே விட்டனர். பல பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட வில்லை. பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கும், ஊழியரக்ளுக்கும் சம்பள பாக்கி, போதிய ஆசிரியர்களை நியமிக்காமை, போன்ற பல்வேறு காரணங்களால் உயர் கல்வி சீரழிகிறது


GoK
ஆக 22, 2025 20:38

முரசொலியில் தேடுங்கள்..திராவிட மாடல் கிடைக்கும் உதயநிதி மாதிரி இருக்கும்...கிணத்துத் தவளை


Ramesh Sargam
ஆக 22, 2025 20:27

முதல்வரிடம் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது அரசு பணி எதுவும் செய்வதில்லை. தினம் தினம் ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டு பேசுவார். ஆனால் ஏதாவது உடம்பு பிரச்சினை என்றால் அப்பல்லோ போன்ற மருத்துவமனையில் அட்மிட் ஆகி கம்ப்யூட்டர் சகிதம் அரசுப் பணிகளை செய்வார் ஒருசில அதிகாரிகளின் துணையுடன். ஏன் அந்த அரசு பணியை உடம்பு நன்றாக இருக்கும்போது செய்வதில்லை?


ஆரூர் ரங்
ஆக 22, 2025 19:53

கல்வி மறுக்கப்பட்டது என்பதே பெரிய ரீல். எல்லா சமுதாயத்தினரும் தொழிற்கல்வி பயின்றார்கள் . உழைக்கும் மக்கள்தான் உலகமே வியக்கும் பொறியியல் அற்புதங்களான ஆலயங்கள் கோட்டைகள், கல்வெட்டுகள், நீராதாரங்களை கட்டியது வரலாறு. படிப்பறிவில்லாதவர் கல்வெட்டுகளை உருவாக்கியிருக்க இயலுமா? ஈவேரா கூறிய பொய்யை தீய எண்ணத்துடன் இவரும் கூறுகிறார்.


திகழ்ஓவியன்
ஆக 22, 2025 20:18

என்ன ரங் குலத்தொழில் செயுங்கள் என்று 6300 பள்ளிகளை அன்று மூடியவர் ராஜாஜி அதனால் தான் இன்று வரை ராஜாஜியை யாரும் பெரிதாக பேசுவதில்லை , அதற்கு பிறகு காமராஜர் அந்த பள்ளி திறந்தார் கலைஞர் கல்லூரிகள் திறந்தார் இது தான் தமிழகம் கல்வியில் சிறந்த வரலாறு


vivek
ஆக 22, 2025 20:33

ஏழரை லட்சம் மாணவர்கள் தமிழ் தேர்வில் பெயில் நியூஸ் பத்தி கனடாவில் நியூஸ் வரலையா..


Jack
ஆக 22, 2025 20:46

ஆர்டிஸ்டுக்கு 200க்கு கூவ சொன்னா அதுக்கு மேலே கூவறார் .


Karthik Madeshwaran
ஆக 22, 2025 19:29

நல்ல அறிவுரை.... கட்சி சார்பற்ற முறையில் பார்த்தால், கண்டிப்பாக நியாயமான தேவையான அறிவுரை.


vivek
ஆக 22, 2025 20:04

முட்டிலே சிறந்த முட்டு நம்ம மாதேஷ் முட்டு....எல்லாரும் ஜோரா கை தட்டுங்க


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 22, 2025 19:27

முரசொலி படி ,கட்டுமரத்தின் போட்டோ வெச்சி கும்பிடு ,திராவிட மாடல் கொண்டாடு , ரோல் மாடலை இன்பா அண்ணன் வடிவில் பாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை