உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மணி அடிக்காதீங்க; சாமி வந்து விடும்... எம்.எல்.ஏ., பேச்சால் சிரிப்பலை

 மணி அடிக்காதீங்க; சாமி வந்து விடும்... எம்.எல்.ஏ., பேச்சால் சிரிப்பலை

சென்னை: 'சட்டசபையில் நேற்று, வால்பாறை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., குட்டி என்கிற சுதாகர் பேசுகையில், ''வால்பாறையில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இங்கிருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி பஸ் சேவை தொடங்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்,'' என்றார். அப்போது, சபாநாயகர் பிரபாகர் குறுக்கிட்டு, அவரது பேச்சுக்கான நேரம் முடிந்து விட்டதை குறிக்கும் விதமாக, மணி அடித்து நினைவூட்டினார். மணி சத்தத்தை கேட்டதும் பதறிய சுதாகர், ''அய்யோ... பெல் அடிக்காதீங்க... எனக்கு சாமி வந்து விடும். நிறுத்து என்று சொல்லுங்கள், நான் பேச்சை நிறுத்தி விடுகிறேன்,'' என்றார். இப்படி அவர் சொன்னதும், அனைவரும் சிரித்தனர். உடனே சுதாகர், ''நான் சொல்வது உண்மை தான். 'பெல்' சத்தம் கேட்டால் எனக்கு சாமி வந்து விடும். இதோ பாருங்கள்... எனக்கு இப்போதே ஒரு மாதிரி ஆகிறது,'' என கூறி, மீண்டும் சிரிக்க வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஆக 29, 2026 11:47

அப்படி என்றால் பிஜேபிக்கு இன்னொரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கிடைத்துவிட்டார் இவரும் கட்சி மாறிவிட வேண்டும் காதில் விழுகின்ற ஒரு பெல்லுக்கு சாமி வந்துவிட்டது என்றால் எவரும் மிகவும் பக்திமான் என்பதும் பகுத்தறிவாளர் அல்ல என்பதும் தெளிவாகத் தெரிகிறது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ