மேலும் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி மாற்றம்
1 hour(s) ago
வங்கி ஊழியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பால் மக்கள் அவதி
4 hour(s) ago | 3
தடையில்லா சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
4 hour(s) ago | 4
சென்னை: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யாத தி.மு.க., - எம்.எல்.ஏ., திராவிடமணியை, சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார். சட்டசபையில், பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், நீலகிரி மாவட்டம் கூடலுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., திராவிடமணி மட்டும் சபையில் அமர்ந்திருந்தார். கூடலுார் அடுத்த ஓவேலியில், புலியால் இருவர் உயிரிழந்தது தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் பிரபாகர் தொடங்கினார். முதலில் பேச திராவிடமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேசி முடித்ததும், சபாநாயகர் பிரபாகர், 'கட்சியா, தொகுதி மக்களா என்று வரும் போது, தொகுதி மக்கள் தான் என முடிவெடுத்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அமர்ந்திருந்த திராவிடமணிக்கு பாராட்டுக்கள்' என்றார். சபாநாயகர் பாராட்டால் நெளிந்த திராவிடமணி, கையை சற்று உயர்த்தியபடி, சபையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.
1 hour(s) ago
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 4