உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயத்தால் இரட்டைக்கொலை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீசார் கூண்டோடு மாற்றம்!

கள்ளச்சாராயத்தால் இரட்டைக்கொலை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீசார் கூண்டோடு மாற்றம்!

மயிலாடுதுறை: கள்ளச்சாராயம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, பெரம்பூர் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தது மற்றும் சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடர்பான பிரச்னை கடந்த மாதம் வெடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yttpd8o9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த மாதம் 14ம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து தினேஷ் என்பவரை தாக்க முற்பட்டனர். அதனை தடுத்த முட்டம் ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஹரி சக்தி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து எஸ்பி. தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை அதிரடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மாவட்டம் முழுவதும் நிர்வாக வசதிக்காக என மொத்தம் 70 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

P.Sekaran
மார் 11, 2025 11:42

பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் இதுதான் நடக்கும். மக்கள் இன்னும் முட்டாளாக தான் உள்ளார்கள். திராவிட மாடல் ஆட்சி கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்து இதுமாதிரி கொலை கற்பழிப்பு இதெல்லாம் நடக்கும் அதனால் எல்லோரும் உஷாராகி அவரவர்கள் கிடைப்பதை சுருட்டுவதில் ஈடுபங்கள் என்று மனசாட்சி இல்லாமல் சொல்ல தோன்றுகிறது


D.Ambujavalli
மார் 10, 2025 06:32

கூண்டோடு பணிமாற்றம் செய்துவிட்டோமே இதைவிட என்ன பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் அந்த வாலிபர்களின் குடும்பத்துக்காக இவ்வளவு செய்ததாயிற்று1 எங்கள் திராவிட மாடலின் மனுநீதிக்கு நிகர் உலகிலேயே இல்லை


சோழநாடன்
மார் 09, 2025 23:13

பணி மாற்றம் என்பது கண்துடைப்பு. பணி நீக்கம் செய்யவேண்டும்.


Ramesh Sargam
மார் 09, 2025 20:55

கள்ளச்சாராயமா, தமிழகத்திலா, கிடையவே கிடையாது, என்று முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு எல்லோரும் கூட்டாக பல்லவி பாடுவார்கள்.


Barakat Ali
மார் 09, 2025 20:27

வெறும் இடமாற்றம் மட்டுமே தண்டனையா ????


Nagarajan S
மார் 09, 2025 19:01

இந்தியாவிலேயே குடியில், கள்ளச்சாராய விற்பனையில், குடிக்கு பலியான கணவர்களால் இளம் விதவைகளாலானவர்களால் தமிழகம் முதல் மாநிலமாக மாறிவிட்டதா ?


अप्पावी
மார் 09, 2025 18:41

காத்திருப்போர் பட்டியல்னா சம்பளம் கிடைக்கும். மாமூல் கட்டாயிடும். வீட்டிலேயே கெடக்கணும்.சைட்ல இவிங்களே காய்ச்சலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 09, 2025 17:40

கள்ளச்சாராயத்தை குடிச்சு செத்தால் அரசு 10 லட்சம் கொடுக்கும். கள்ளச்சாராயம் குடிப்பதை தடுத்து செத்தால் அரசு என்ன கொடுக்கும்?


Ramesh Sargam
மார் 09, 2025 20:23

சரியான கேள்வி?


சிட்டுக்குருவி
மார் 09, 2025 17:39

உலகத்திலேயே முதன்மை மானிலம்மாக்கிய பெருமை முதல்வருக்கே செரும்.இளைஞர்களை குடிக்கு அடிமையாக்கி,இளம்பெண்களை விதவையாக்கி ,வேலைக்கு தகுதி இல்லாதவர்களாக ஆக்கி இங்கிருக்கும் வேலைகளுக்கு மற்றமானிளதவரை நம்பி, அஹா என்று மார்தட்டிக்கொள்ளபவருக்கு நோபல்,ஆஸ்கார் போன்ற பரிசுகளுக்கு தகுதியானவர்.பெருமைபடுங்கள் தமிழ் மக்களே இவரையே இன்னும் இருவது வருடங்களுக்கு தேர்ந்தெடுங்கள் தானாக தமிழ்நாட்டிலிருந்து தமிழ் காணாமல் போய்விடும்.பெரும்பாலான தமிழர்கள் எல்லாம் குடித்தே மாண்டுவிடுவார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 09, 2025 17:37

முன்பு கள்ளச்சாராயம் குடித்தால் உயிர் போகும் என்று சொல்லி டாஸ்மாக் கொண்டுவந்தார்கள். தற்பொழுது கள்ளச்சாராயம் குடிப்பதை தடுத்தால் உயிர் போகும் என்ற நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்துள்ளார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை