உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: அரிசி விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

டவுட் தனபாலு: அரிசி விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் சன்ன ரக அரிசி விலை, ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு, 6 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இது, கிலோவுக்கு 12 ரூபாய் வரை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரது இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே அது காட்டுகிறது. ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழக சந்தைக்கு அரிசி கொண்டு வர வேண்டும்.டவுட் தனபாலு: எங்கேயோ இருக்கிற ஜெர்மனிக்கு போய் முதலீடுகளை ஈர்க்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடுபட்டுட்டு இருக்காரு... ஆனா, உடனடி மற்றும் அத்தியாவசிய தேவையான அரிசி தட்டுப்பாட்டை தீர்க்க முதல்ல நடவடிக்கை எடுத்துட்டு, அப்புறமா ஜெர்மனிக்கு போயிருந்தா, 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டியிருக்கலாம்!உ.பி.,யில் செயல்படும், சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் ராம் கோபால் யாதவ்: உத்தர பிரதேசத்தில், 'இண்டியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிந்து விட்டது; அது குறித்த தகவலை, விரைவில் வெளியிடுவோம். வரும் லோக்சபா தேர்தலில், எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்.டவுட் தனபாலு: ம.பி., சட்டசபை தேர்தல்ல, உங்க கட்சிக்கு சீட்கள் ஒதுக்காம, காங்., அல்வா குடுத்துச்சு... அதை மனசுல வச்சுக்காம, பெருந்தன்மையா காங்., கட்சிக்கு சீட் ஒதுக்குறீங்களா அல்லது உங்க மாநிலத்தில் அசுர பலத்துடன் இருக்கும் பா.ஜ.,வை எதிர்க்க, துணை தேடுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தொலை நோக்கு பார்வையுடன், பல திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆயினும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் திட்டங்கள், வருமான வரி உச்ச வரம்பு பற்றி அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்; உறுதியான பின் வெளியில் சொல்வதே நாகரிகம்.டவுட் தனபாலு: நீங்க பா.ஜ.,வுடன் தான் கூட்டணி பேசிட்டு இருப்பதாக தகவல்கள் வருது... அதனால, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட மேற்கண்ட திட்டங்களை வலியுறுத்தி, அதை நிறைவேற்றினா தான் கூட்டணி என, பா.ஜ.,வுக்கு நிபந்தனை விதிச்சா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

g.s,rajan
பிப் 04, 2024 07:06

நமது நாட்டில் அரிசி விலை மட்டும் அல்ல அத்தியாவசியப் பொருட்களின் விலை எல்லாம் யானை விலை ,குதிரை விலை விற்கிறது ,மத்திய மாநில அரசுகள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இல்லையேல் பசி மற்றும் பட்டினிச் சாவுகள் வெகுவாக அதிகரிக்கும் .


மேலும் செய்திகள்











புதிய வீடியோ