உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!

மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: வரதட்சணை என்ற பெயரில் திருநெல்வேலி அல்வா இருட்டுக்கடையை கேட்ட புதுமாப்பிள்ளை மருமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் மீது அல்வா கடை உரிமையாளர் கவிதா சிங், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உரிமையாளர் கவிதா சிங், தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pu13fmpr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவிதா சிங் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.திருநெல்வேலியில் தலைமுறை தலைமுறையாக பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளக்கம்

கனிஷ்காவின் மாமனார் நிருபர்களிடம் கூறியதாவது: இருட்டுக் கடையை நாங்கள் கேட்கவில்லை. அந்தக் கடைக்கு வங்கியில் ரூ.5 கோடி கடன் உள்ளது. இரண்டு கார்களை கடனுக்கு வாங்கி உள்ளனர். வட்டி கட்ட முடியாமல், ஒரு காரை விற்றுவிட்டனர்.மருமகள் குற்றம்சாட்டிய காலத்தில் எனது மனைவி சிங்கப்பூரில் இருந்தார்.அந்தப் பெண் மீது உள்ள குற்றச்சாட்டை மறைக்கவும், கடன் தொகை காரணமாக ஏற்பட்ட மனநோய்க்கு ஆளானதை கண்டுபிடிக்கப்பட்டதால் குற்றச்சாட்டை கூறுகின்றனர். இந்த பிரச்னையில் தவறு வெளிப்பட்டு விட்டது. மோசடி வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து குற்றம்சாட்டினர். அதற்கு எந்த வித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

KRISHNAN R
ஏப் 16, 2025 20:39

மர்மமாக உள்ளது என்று கேள்வி பட்டுள்ளோம்... ஆனால்.. இது இருட்டாக இருக்கு..... என்ன செய்ய....,,,வெளிச்சத்திற்கு... உண்மை வர வேண்டும்


Ganesun Iyer
ஏப் 16, 2025 20:20

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு புண்ணியவான் வந்து அல்வாவை டேஸ்ட் பாத்துட்டு போனார்.


சிட்டுக்குருவி
ஏப் 16, 2025 18:49

இனிமேல் திருமணம் பேசுபவர்கள் தங்களின் உத்திரவாதங்களை குறைந்தபட்ச விலை பத்திரம் எழுதி சாட்சிகளோடு கையொப்பமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் .வெற்று தாள்களில் எழுதினாலும் செல்லும் .இதை மேலை நாடுகளில் செய்கின்றார்கள் .இதை செய்தால் பெரும்பாலான திருமணம் சார்ந்த குற்றங்கள் குறையும். வேற்றுமை ஏற்படும்போது தீர்ப்பதும் சுலபம் .பெண்பிள்ளைகள் பெற்றோரின் மனக்கஷ்டங்கள் குறையும். முதலில் வித்தியாசமாக தோன்றும் .காலபோக்கில் அதுவே பழக்கமாகிவிடும்.


Keshavan.J
ஏப் 16, 2025 18:14

உண்மையிலே வாட்ஸாப்ப் மெசேஜ் இருந்தால் அவனுக்கு ஆல்வா குடுக்கணும். விவாகரத்து செய்யது வேறு கல்யாண் செய்ய வேண்டும். சிங்கு சிங்கி அடிக்கட்டும்.


Karthikeyan Palanisamy
ஏப் 16, 2025 17:51

இந்த பிரச்சனையின் மூலத்தை தேடினால் அதில் கண்டிப்பாக திராவிடம் இருக்கும்


ponnaiah EMPEE
ஏப் 16, 2025 21:05

கண்டிப்பாக திராவிட சித்தாந்தத்தில் வரதட்சனை கொடுமை இருக்காது இது வடக்கன் செயல்...


Rasheel
ஏப் 16, 2025 17:04

வரதக்ஷனை கேட்பவனுக்கு ஒரு பாயசத்தை போட வேண்டியதுதான்.


VSMani
ஏப் 16, 2025 16:59

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கோவிட் காலகட்டத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் தன்னை மருத்துவமனையில் பார்க்கவரவில்லை என்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாரே


MP.K
ஏப் 16, 2025 16:30

இருட்டுக்கடை அல்வா குடும்பத்துக்கே அல்வா கொடுத்த அவலம்


Keshavan.J
ஏப் 16, 2025 18:11

ஆமாம் அல்வாவுக்குகே ஆல்வா.


Kovandakurichy Govindaraj
ஏப் 16, 2025 16:00

நல்ல குடும்பத்தின் மீது சேற்றை வாரி இறைக்கவே நல்லவன் போல வேஷம் போட்டு திரியுவாங்க போலிருக்கு


Mecca Shivan
ஏப் 16, 2025 15:48

இதை சாக்காக வைத்து பஞ்சாயத்து செய்கிறேன் என்று வட்டம் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கிளம்பி வந்து அல்வாக்கடையை ஆட போட முயல்வார்கள் .ஏனென்றால் இந்த வியாபாரத்தை மிரட்டி வாங்கி பெரிதுபடுத்தினால் திருட்டுப்பணத்தை வெள்ளையாக உதவியாக இருக்கும் ..


முக்கிய வீடியோ