உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

தமிழை ஒழித்ததே திராவிடத்தின் சாதனை: சீமான் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்செந்தூர்: '' திராவிடத்தின் ஒரே சாதனை தமிழை ஒழித்தது தான்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.திருச்செந்தூரில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற வரலாற்று உண்மையை ஏற்க மறுத்த கன்னடர்கள் கிளர்ந்து எழுந்தனர். தமிழை இழிவுபடுத்தி பேசினர். ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் ஆதரவாக இங்கு ஒருவர் கூட கருத்து எழுப்பவில்லை. கன்னடர் கருத்தை கண்டித்து பேசவில்லை என்பது, கர்நாடகாவில் கன்னடர்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள். தமிழர்கள் அப்படி இல்லை என்பதை நிரூபித்து காட்டியது.உயிர்மொழிப்போர் மறவர்கள் நம் முன்னவர்கள். அப்போது ஏற்பட்ட மொழி புரட்சியில் அதிகாரத்திற்கு வந்தவர்கள் திராவிடர்கள். அந்த அரியணையில் அமர்ந்த உடன் முடிவெடுத்தார்கள். தமிழனுக்கு உயிர் உடலில் இல்லை. மொழியில் இருக்கிறது. தமிழுக்கு, தமிழனுக்கு உயிர் மொழியில் இருக்கிறது. இதனை அழிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முன்னோர்கள் சொன்னார்கள்.சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முதல்வர் சொன்னார். ஆனால், அது முற்றுப்பெறவில்லை. எங்கும் தமிழ். எதிலும் தமிழ். இனி இருக்காது. இது தான் திராவிட மாடல் ஆட்சி. திராவிடர்களின் கோட்பாடு. இனிஇருக்காது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு.ஈ.வெ.ராமசாமி தமிழில் பெயர் வைப்பது பழமை என்றார். தமிழில் எழுதுவது, பேசுவது படிப்பது எல்லாம் பத்தாம் பசலித்தனம். தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா?, சோறு கிடைக்குமா? தமிழில் படித்தால் பிச்சைகூட எடுக்க முடியாது என சொன்னவர் ஈ.வெ.ராமசாமி. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்கள். தமிழ் முட்டாள்களின் பாஷை என்றார்கள். இதனை சொன்னவரை தமிழரின் தலைவன் என்றார்கள்.சிவனும் தமிழும் வேறு இல்லை. முருகனும் தமிழம் வேறு இல்லை.தமிழ் கடவுள் முருகன். தமிழே முருகன் தான். சிறந்த மொழி2026 தேர்தலில் திராவிடனுக்கு தலைமுழுக்கு செய்யவில்லை என்றால் நாம் வாழ்ந்து பயனில்லை. இவர்களை போன்று பொய் பிரட்டுகளை கட்டமைத்தவர்கள் உண்டா. கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன தொடர்பு. சில மொழிகள் பிறந்து சிறக்கும். சிறந்து பிறந்த மொழி தமிழ். திராவிடர்கள் சாதித்தது ஒன்றே ஒன்று தான். அவர்களின் சாதி ஒழிப்பு ஹம்பக். சமூக நீதி வெட்டிப்பொய். பெண்ணிய உரிமை ஏமாற்று வேலை. எல்லாமே ஏமாற்று. அவர்களின் ஒரே சாதனை தமிழை ஒழித்தது தான். தமிழை ஆங்கிலம் கலந்து பேசி அழித்தான். தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இந்த நிலையை மாற்றாத வரை உறக்கமில்லை என்ற உறுதியை ஏற்க வேண்டும். ஒடிசாவில் தமிழனை ஆட்சி செய்ய விடுவதா என கேட்டார்கள். இங்கு வந்து தமிழ் தமிழ் என பேசுகிறார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 15, 2025 09:48

திராவிடர்கள் ஆட்சி செய்தும் இன்னும் தமிழ் இருக்கிறதே அது அதிசயம் அல்லவா


Padmasridharan
ஜூன் 15, 2025 03:45

"ஹம்பக்" என்று இந்த செய்தியில் வந்திருப்பது தமிழ் சொல்லா சாமி. . இதையும் கவனிக்கவும். . "தமிழனுக்கு உயிர் உடலில் இல்லை. மொழியில் இருக்கிறது. தமிழுக்கு, தமிழனுக்கு உயிர் மொழியில் இருக்கிறது" ஏதோ பிழை இதில் அய்யா


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 02:09

நீ அப்படியே பிஜேபி கருத்துக்களை காப்பி அடித்து நல்லா பேசு. கடைசியில் ஸ்டாலின்கிட்டயே பெட்டி வாங்கிக்கொண்டு, ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து, திமுகவை ஜெயிக்க வைத்துவிடுவாய். சீமான் வேலை செய்வது திமுகவிற்கு தான் என்று எல்லோருக்கும் தெரியும்.


Priyan Vadanad
ஜூன் 15, 2025 00:00

மழை நன்றாக பெய்து இருக்குமிடம் குளிர்ச்சியாய்த்தானே இருக்கிறது? சீமான் எப்போது பேசுவார், எப்போது உளறுவார் என்பது அவருக்கே தெரியாது.