உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம் என்பது அழுக்கு சித்தாந்தம் பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்

திராவிடம் என்பது அழுக்கு சித்தாந்தம் பா.ஜ., அஸ்வத்தாமன் ஆவேசம்

நாகப்பட்டினம்:''திராவிடம் என்பது தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள அழுக்கு சித்தாந்தம்,'' என, பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறினார்.நாகூரைச் சேர்ந்த தங்க முத்துகிருஷ்ணன் என்பவர் மனைவி தங்கம்அம்மாள், 1995ல் பார்சல் வெடிகுண்டு வாயிலாக படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை 7ல் நாகூரில் நடந்த இவரது நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன், மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக, நாகூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கில் உயர் நீதிமன்ற ஆணைப்படி, நாகை கோர்ட்டில் அஸ்வத்தாமன் நேற்று ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, தி.மு.க.வினருக்கு எதிராக பேசுவோர், ஊழலை வெளிக்கொண்டு வருவோர், சித்தாந்தத்திற்கு எதிரானோர் மீது போலீசார் வழக்கு போடுகின்றனர். கஞ்சா, கள்ளச்சாராய பரவல் மிகப்பெரிய அளவில் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மீதான தாக்குதலும், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன. இதைப்பற்றி கவலைப்படாத காவல் துறை, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினரை கைது செய்வதில் தீவிர கவனம் செலுத்துகிறது.தமிழகத்தில் பூணுால் அறுப்பு நடந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் பூணுால் அணிவதில்லை. மற்ற சமூகத்தினரும் அணிகின்றனர். விவரம் தெரியாமல் பூணுாலில் கை வைத்து அடி வாங்காதீர்கள். இதை எச்சரிக்கையாகவே கூறுகிறேன்.கிறிஸ்துவராக இருப்பதாலேயே சபாநாயகராக இருக்கிறார் என்று ஒருவர் கூறுகிறார். அது சபாநாயகர் மாண்பை மீறுவதில்லையா, அதை சபாநாயகர் ஏன் கண்டிக்கவில்லை. கருத்து பேசுவது அடிப்படை உரிமை.'ஈ.வெ.ராமசாமியை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது' என உதயநிதி கூறியுள்ளார். குப்பையை சுத்தம் செய்ய, அதை தொட்டு தான் ஆக வேண்டும். திராவிடம் என்பது தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள அழுக்கு சித்தாந்தம்.மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கூறும் திருமாவளவன், தேசிய கல்வி கொள்கையை ஒத்துக் கொள்வாரா. தேர்தலில் சீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க தான், டுபாக்கூர் மது ஒழிப்பு மாநாடு.தமிழகத்திற்கு கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ஏ. நிதியாக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவ்வாண்டு 4,800 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கவில்லை என ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஜி.எஸ்.டி.யிலும் இப்படி தான் நாடகம் ஆடினர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை