உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gli7y69k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
மார் 21, 2025 15:41

அதுல வேலை பாத்துக் கிட்டிருந்தவங்க வேலைக்கும் சங்கு. ரெண்டு கோடி வேலை ஹைன்.


Nallavan
மார் 21, 2025 11:11

சிங்கப்பூரில் ஆள் இல்லாமல் தான் இரயில் போக்குவரத்து நடக்கிறது, ஆள் இருந்தால் தான் பயம்


Ramalingam Shanmugam
மார் 21, 2025 10:55

வாழ்த்துக்கள்


சிவம்
மார் 21, 2025 10:13

டிரைவர் இல்லாத மக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவை இல்லாதது. நம் நாட்டில் வேலை செய்ய திறமையான ஆட்களுக்கு பஞ்சமா என்ன. நில மட்டத்தில் ஓடும் ரயில்களுக்கே டிரைவர் இல்லாதவை என்றால், சற்று அச்சம் உண்டாகும். மெட்ரோ ரயில் 50 அடி உயரத்தில் செல்லுபவை. டிரைவர் இல்லை என்றால் அச்சமாகதான் இருக்கும்.


varadarajan
மார் 21, 2025 09:33

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை