உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய சரமாரி புகார்: மயிலாடுதுறையில் டி.ஐ.ஜி., விசாரணை

டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய சரமாரி புகார்: மயிலாடுதுறையில் டி.ஐ.ஜி., விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய புகார்கள் தொடர்பாக, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி., இன்று நேரில் விசாரணை நடத்தினார்.மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், 'டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக' தெரிவித்திருந்தார். அதை மறுத்த டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார். இந்நிலையில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

JAGADEESANRAJAMANI
ஜூலை 21, 2025 13:49

நேர்மையான அதிகாரிக்கு கிடைத்திருக்கும் பரிசு. நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்கவேண்டும். அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும். காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை நீக்க உதவிசெய்ய வேண்டும். மக்களும் மீதமுள்ள நேர்மையான அதிகாரிகளும் காக்கப்படுவார்கள். சவுக்கு சங்கர் கூறியதுபோல்தான் நடக்கிறது.


Nagarajan D
ஜூலை 25, 2025 22:16

அங்கேயே நேர்மை இல்லை அவனுங்க எப்படி தானாக முன் வந்தோ பின் வந்து விசாரிப்பானுங்க? அயோக்கியர்கள் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாலேயே நம்நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறது


Vijayaraj Mariappan
ஜூலை 19, 2025 16:24

வேஸ்ட் கோவேர்ந்மேன்ட் ப்ளீஸ்


R.P.Anand
ஜூலை 19, 2025 09:38

இனி ஜாககிரதையாக இருங்கள். தற்கொலை வரை கொண்டு செல்வார்கள்


Nalla Paiyan
ஜூலை 19, 2025 07:44

இது எதிர்பார்த்ததுதான், இதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..... இப்பொழுது அவர்கள் மீது அந்த அதிகாரி மீது சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த துவங்குவார்கள்..


Padmasridharan
ஜூலை 19, 2025 05:50

விசாரணை என்ற பெயர்ல மக்களை எப்படியெல்லாம் துன்புறுத்தி பணம் / பொருள் புடுங்கறாங்கன்னு அவங்களுக்கே தெரியும் சாமி. எந்த துறையிலுமே உண்மை தனிச்சு நின்னு போராடிகிட்டுதான் இருக்கு. பொய்கள் பேசறவங்கதான் கூட்டா சேர்றாங்க. அதுவும் இந்த காவல் துறையில நடிகர்கள் நிறைய பேர் எப்படியெல்லாம் ஏமாத்தராங்கனு அவங்க மனசாட்சிக்கே தெரியும். அரசு வேலைய வாங்கற சம்பளத்துக்கு, புடிச்சா செய்யணும் இல்லைனா விட்டுட்டு வேற வேலைக்கு போகணும். மத்தவங்கள ஏமாத்தறது ஒரு பொழைப்பா


Nandakumar Naidu.
ஜூலை 19, 2025 01:53

கேவலமான கேடு கெட்ட விளங்காத ஆட்சி.


Natarajan Ramanathan
ஜூலை 19, 2025 01:35

முடிவை எடுத்துவிட்டு எதற்காக இந்த கண்துடைப்பு விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.


bal man
ஜூலை 18, 2025 23:15

வேஸ்ட் காவல் .


கண்ணா
ஜூலை 18, 2025 22:48

தமிழக காவல்துறையா அல்லது திமுக காவல்துறையா???


Kjp
ஜூலை 18, 2025 22:28

ஆயிரம் ரூபாய் இலவச பயணம் கொடுத்தால் போதும்.நாங்கள் நல்லாட்சி நடத்திக கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி மற்ற எல்லா துறைகளிலும் மோசமான ஆட்சி நடத்தி வருகின்றனர்.அதிலும் காவல் துறையை திமுகவினர் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவித்து கொண்டு இருக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி