உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்

கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்

மயிலாடுதுறை: திருவெண்காடு கோவிலில் கார்த்திகை 3ம் ஞாயிறு அகோரமூர்த்தி அபிஷேகம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் பால்குடம் எடுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலம் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது இங்கு மூர்த்தி, அம்பாள், தீர்த்தம், விருட்சம், ஆகமப்படி பூஜை அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை இம்சித்தான். போர் புரிய சென்ற நந்தியை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடைய செய்ததால் கோபம் கொண்ட சிவபெருமான் தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க முற்பட்டபோது அதனை கண்டு அஞ்சிய அசுரன் சரணாகதி அடைந்தான். இதனை போற்றும் வகையில் கார்த்திகை மூன்றாம் ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிறான நேற்று (டிச.,1) மதியம் அகோர மூர்த்தி சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சந்திர தீர்த்தத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், கொட்டும் மழையிலும் 'ரெயின் கோட்' அணிந்தபடி பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

s. narayanan
டிச 09, 2024 03:50

எந்த கோவில் உண்டியல் ஆட்டய போடலாம் என கட்சிகாரங்க அலையுராங்க.எந்த கோவில இடிக்கலாம் என புருசனும் மகனும் திட்டம்போடுரானுக இவ சாமி கும்பிட வேசம் .சூட்டிங் ஓவர் தான்.


M.R. Sampath
டிச 04, 2024 13:03

எந்த காலத்திலும் கடவுள் மறுப்பு செய்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பர். மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து தான் என்ற ஆணவம் அகங்காரம் கொண்ட மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஒரே குடும்பத்தில் இரு தரப்பாரும் இருந்து வந்தது பிரஹலாதன் மறறும் பல புராணங்களில் பதிவாகியுள்ளது. முடிவில் அத்தகைய ஆணவம் கொண்டவர்கள் அழிந்து போவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, தாற்காலிக சுய நலத்திற்காக தங்களையே ஏமாற்றிக்கொண்டு திராவிட மாடல் எனும் போர்வையின் கீழ் ஒளிந்து மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி மு க விரைவில் 2026 அசெம்பிளி எலெக்ஷனில் தோல்வியை சந்திப்பது உறுதி.


venugopal s
டிச 03, 2024 08:48

ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் பாஜகவினர் மட்டுமே குத்தகைக்கு எடுத்து உள்ளனர் என்ற விஷயமே திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாதா ?


பேசும் தமிழன்
டிச 03, 2024 07:43

நாடகம் முடியும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதய்யா !!!


Tetra
டிச 03, 2024 07:21

முற்றிலும் நாடகம். தன்னை மதசார்பற்றவராக காண்பித்துக் கொள்கிறார். கடவுளையே ஏமாற்றும் வேலை. சில நாட்களுக்கு முன் மசூதிக்கும் சர்ச்சுக்கும் சென்று வந்தவர்.


S. Neelakanta Pillai
டிச 03, 2024 05:33

இதுதான் கடவுளின் திருவிளையாடல். காட்டுமிராண்டியை கட்டிக்கொண்டு பகுத்தறிவுக்கு சகுனம் பார்த்தானாம் நாத்திகவாதி. முரண்பாடு. இந்த முரண்பாடு உண்மையில்லை வெறும் நடிப்பு மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


ராமகிருஷ்ணன்
டிச 03, 2024 04:53

விடியல் குடும்பம் செய்யும் இந்துவிரோத செயல்களை ஒருவரை மட்டும் கோவில்களுக்கு அனுப்பி சரி செய்ய முடியாது. திமுகவின் இந்துகளை ஏமாற்றும் கொடிய பாவம்டா இது.


Esan
டிச 02, 2024 19:21

கடவுள் நம்பிக்கை இல்லாத முதல்வர், கோயில் கோயிலாகச் செல்லும் மனைவியைக்கூட கட்டுப்படுத்த முடியாதவர் மற்றவர்களைக் கட்டுப்படுத்த உரிமையில்லாதவர்.


T.Senthilsigamani
டிச 02, 2024 18:35

வருண பகவான் தடுத்தாலும், விடாது நேர்த்தி கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின் அவர்கள், ஹிந்து மதம் இசை வாணி போன்றவர்களால் இழிவு செய்யப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அகோர மூர்த்தி அருள் கிட்டும்.


J.V. Iyer
டிச 02, 2024 16:51

மகன் தமிழக முதல்வராக்க வேண்டுதல். கொள்ளை ஆசை. ஆசை யாரைவிட்டது.


சந்திரன்,போத்தனூர்
டிச 02, 2024 17:36

ஒருவேளை சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னவர் ஒழியட்டும் என்று கூட இந்த தீவிர பக்தை பால்குடம் எடுக்கலாம் யார் கண்டது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை