உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்ற போது முன் சென்ற பிக்கப் வாகனம் மீது மோதியது. காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வேறு சில வாகனங்களும் மோதின. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன், 30. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது. மற்ற மூவரும் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kumaran
அக் 12, 2025 07:43

சமூக சிந்தனையின் செயலாக்கத்தில் தினமலர் நாளிதழ்களில் அதிகாலை பயணத்தை தவிர்க்கவும் என்று தவறாது குறிப்பிடுவது இந்த மாதிரி பெரும்பாலும் விபத்துகள் அதிகாலையில் தான் அதிகம். நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


தியாகு
அக் 12, 2025 07:19

வாகன விபத்துகளுக்கு அதிகாலை பயணம் மட்டும் காரணம் இல்லை, கட்டுமர திருட்டு திமுக பெரும்பாலான டிரைவர்களை குடிகாரர்களாக ஆக்கிவைத்திருப்பதும் ஒரு காரணம்.


GMM
அக் 12, 2025 07:19

வாகன போக்குவரத்து ஒழுங்குமுறை தேவை. பகல், இரவு 10 முதல் 4 வரை லாரி போன்ற பொருள் போக்குவரத்து வாகனங்கள் ஓட்ட அனுமதி. மற்ற நேரங்களில் தடை. கால் டாக்சி இரவு 2 முதல் 4 வரை ஓட்ட தடை. அல்லது 40 கிமீ வேகம் செல்ல மட்டும் அனுமதி.


முக்கிய வீடியோ