மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
29 minutes ago
சென்னை: திருச்சி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ஒத்திவைப்பது தொடர்பாக கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக தலைமைதேர்தல் ஆணையர் பிரவீண் குமார் கூறியுள்ளார். திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க., சார்பில் நேருவும் போட்டியிடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழக உள்ளாட்சிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெ உள்ளது. இதனையடுத்து திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டுமென தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஓட்டு எண்ணிக்கையை அக்டோபர் 19ம் தேதி வரை நிறுத்த வேண்டுமென கூறின. இந்நிலையில் இது குறித்து பேட்டியளதத்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், ஒட்டு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், இறுதி முடிவை தேர்தல் ஆணையம் தான் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
18 minutes ago
29 minutes ago