உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியவை என்ன: அமலாக்கத்துறை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, கோவை மற்றும் திருச்சியில் அமைச்சர் நேரு குடும்பத்தினர் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் கட்டுமான நிறுவனம், அதன் ஊழியர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் இயக்குநரும், அமைச்சர் கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் தி.மு.க., எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.திருச்சி தில்லை நகரில் உளள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் பலமணி நேரம் சோதனை நடத்தினர். நேருவின் குடும்பத்தினர் காற்றாலை மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில் அமலாக்கத்துறை எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சோதனையின் போது என்ன கைப்பற்றப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; சென்னை, திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் 2002ம் ஆண்டின் PMLA பணபரிமாற்ற சட்டத்தின் படி M/s Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் ஏப்.7ம் தேதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு அந்த பதிவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவில், எந்த அரசியல்வாதியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, சோதனை என்று நடைபெற்றது, எந்த நிறுவனத்தில் நடைபெற்றது என்று அதன் பெயரையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஏப் 12, 2025 10:46

ஒரு வருஷத்துக்கு தொப்பைக்கு தீனி போடக் கூடிய அளவுக்கு குப்பை ஆவணங்களும், பழைய கம்பியூட்டர்களும், பென் டிரைவ்களும் சிக்கியிருப்பதாக பேசிக்கறாங்க.


xyzabc
ஏப் 11, 2025 22:54

சிங்காரத்தோப்பு மன்னனுக்கு கமிசன் கொடுக்காமல் நிறைய ஆஸ்பத்திரிகள் இயங்காது. மாடல் மந்திரிகள் அவரவர் வழியை கண்டு பிடித்துள்ளனர். They are keeping ED busy.


Matt P
ஏப் 11, 2025 22:45

ஏற்கெனவே உடன்பிறப்பு ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இப்போது இந்த தம்பி ஆஸ்பத்திரியில் அனுமதி. தவறான போக்கு, ஆடம்பர வாழ்க்கை ...இப்படி தான் போகும் போல.


Ramona
ஏப் 11, 2025 21:37

பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று. கேஸில் தண்டிக்கப்பட போவது இல்ல ,வீண் ரெய்டு ,வீணான வீராப்பு .


மீனவ நண்பன்
ஏப் 11, 2025 22:35

நீங்க முட்டு கொடுத்து பேசலாம் ..


சமீபத்திய செய்தி